Wednesday, February 11, 2009
தமிழ் முஸ்லிம் ஒற்றுமையென்பது புதியதோர் திருப்புமனையை நோக்கிய பயணம். (பாராளுமன்ற உறுப்பினர் வினாயமூர்த்தி முராளிதரன்)
கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் செயற்ப்பாடுகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் நேற்று வாகரைப் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் இவ் ஒன்றியத்தின் தொடக்க உறுப்பினர்களான முஸ்லிம் மதத்தலைவர்கள் மற்றும் மூதூர் பிரதேச முஸ்லிம் அமைப்புகள் என்பன கலந்து கொண்டனர். இக் கலந்தாலோசனையின் போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன ஐக்கியம் ஒருமைப்பாடு புரிந்துணர்வு என்பவற்றை ஏற்படுத்தி இரு இனங்களும் கிழக்கு மாகாணத்தில் சகோதர ரீதியான ஐக்கியப்பட்ட உணர்வுடன் வழிப்படுத்தப்படும் நிலையை இலக்காக கொண்டு செயற்பட முன்வர வேண்டும் எனும் தொனிப் பொருளில் இடம்பெற்றன. மேலும் இவ் ஒன்றியத்தின் தலைவராக வாகரைப் பிரதேச பொறுப்பாளர் றீகசீலன் நியமிக்கப்படவேண்டுமெனவும், இதன் ஆயுள் கால தவிசாளராக பாராளுமன்ற உறுப்பினர் வினாயமூர்த்தி முரளிதரன் நியமிக்கப்படவேண்டும் எனவும் ஒன்றியத்தின் முஸ்லிம் தலைவர்களும் அங்கத்தவர்களும் வேண்டி நின்றனர். இங்கு தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஐக்கியப்பட்ட உணர்வுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றுக்கொள்வது தொடர்பாகவும் முஸ்லிம் பிரதேசத்தை அண்டியுள்ள தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டன. மற்றும் இச் சந்திப்பில் கலந்துகொண்ட மூதூர் பிரதேச முஸ்லிம் தலைவர்களுக்கும், அமைப்புக்களுக்கும் பல தொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட அபிவிருத்தி தொடர்பான வேண்டுதல்களையும் பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) முன்வைத்தார்.
தகவல் தேனகம்
மட்டுநகர்.
No comments:
Post a Comment