Friday, February 13, 2009

பிரித்தானிய விசேட பிரதிநிதியின் நியமனத்தை நிராகரித்த இலங்கை .


பிரித்தானியாவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி நியமனத்தை இலங்கை அமைச்சரவை நிராகரித்துள்ளது. தமது தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கைமூலம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் தொடரும் மோதல்களை நிறுத்தி, இறுதிச் சமாதானத்தை எட்டுவதற்காக பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுனை நியமித்தார்.

இந்த விசேட பிரதிநிதி, இலங்கையிலுள்ள அனைத்து சமூகத் தலைவர்களுடனும் தொடர்புகளைப் பேணி சமாதானத்தை ஏற்படுத்துவார் என பிரித்தானியப் பிரதமர் கூறியிருந்தார்.

இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்தது.எனினும், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை குறித்து அமைச்சரவைக்கு வெளிவிவகார அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அதுபற்றி ஆராய்ந்த அமைச்சரவை பிரித்தானியாவின் இந்த நியமனத்தை நிராகரிப்பதற்குத் தீர்மானித்தது. இந்த நியமனமானது இலங்கையின் இறைமைக்கும் தலையிடும் விடயமென அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சரவையின் இந்தத் தீர்மானத்தை வெளிவிவகார அமைச்சு அறிக்கைமூலம் பிரித்தானியாவுக்கு அறிவித்திருப்பதாகத் தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com