பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் களுவாஞ்சிக்குடியில்
பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்டுளார். இரண்டு நாட்களுக்கு மேலாக அப்பிரதேசத்தில் தங்கியுள்ள அவர் பிரதேச மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருவதாகவும் மிகவும் அவசரமானவை என இனங்காணப்பட்ட பிரச்சினைகட்கு உடனடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
களுவாஞ்சிக்குடி பிரதேசப் பொறுப்பாளர் வீரா தலைமையில் இடம்பெற்றுவரும் இம்மக்கள் சந்திப்பில் பிரதேசத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு கெடுபிடிகள் விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு கூடுதலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அதைத் தொடர்ந்து பிரதேச பாதுகாப்பு உயரதிகாரிகளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் முரளிதரன் அவை தொடர்பாக படைத்தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment