Wednesday, February 4, 2009
அரசியல் யாப்பின் கீழ் வடபகுதி தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படும்
சுதந்திர தின செய்தியில் ஜனாதிபதி உறுதியளிப்பு
வடபகுதி தமிழ் மக்கள் மிக விரை வில் விடுவிக்கப்பட்டு அரசியல் யாப்பின் கீழ் அவர்களுக்குரித்தான சகல உரிமைகளும், சமத்துவமும் வழங்கப்படும் என இன்றைய தினத்தில் உறுதியளிக்கின்றேன்.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சில மாதங்களாக ஒரு தீர்க்கமான மனிதாபிமான நடவடிக் கையை முன்னெடுத்து எமது தாய் நாட்டை பயங்கரவாதத்தின் பிடியி லிருந்து விடுவித்து, எமது சுதந்திரத்தைப் பலப்படுத்துவதில் நாம் அடை ந்துள்ள வெற்றிகளே இம் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் காரணமாகும்.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவிலாறு பிரதேசத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவி ப்பதில் எமது சுதந்திர ஜனநாயக சமூகத்தின் வீரமிகு படையினர் அடைந்த வெற்றிகளில் தொட ங்கி முழு கிழக்கு மாகாணத்தையும் விடுவித்து முழு யாழ்ப்பாண தீபகற்பமுட்பட வட மாகா ணத்தின் மிகப் பெரும்பாலான நிலங்களை மீண்டும் எமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் நாம் கொண்டு வந்துள்ளோம்.
ஒரு காலத்தில் பயங்கரவாதத்தின் கோட் டைகள் என்று நம்பப்பட்டுவந்த கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு போன்ற பகுதிகள் எல்லாம் அடுத்தடுத்து வீழ்ந்திருக்கும் நிலையில் எமது தாய் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தின் எச்சசொச்சங்களையும் துடைத்தெறிந்து எமது எல்லா மக்களும் சுதந்திரத்தின் விடியலை காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
1948ம் ஆண்டில் நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தையும் மிஞ்சும் வகையில் இந்த 61வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மிகவும் பெறுமதியான அர்த்த புஷ்டியான சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் எமது தாய் நாட்டின் விடுதலைக்காக எமது வீரமிக்க படையினர் மேற்கொண்ட தியாகம், காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் துணிவு என்பவற்றுக்கு நான் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு காலத்தில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான எமது படை நடவடிக்கைகளை விமர்சித்த பலரும் பயங்கரவாதம் எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இலங்கை யையும் எமது படை வீரர்களின் வெற்றிகளை யும் ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிடுவதை யிட்டு நாம் இச்சந்தர்ப்பத்தில் திருப்தியடைய முடியும்.
நாம் ஒரு முழு நிறைவான சுதந்திரத்தை நோக்கி முன்னேறிவரும் இவ்வேளையில் எமது எண்ணங்கள் சிந்தனைகள் யாவும் கொடிய பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருக் கும் வடபகுதி அப்பாவித் தமிழ் மக்கள் பற் றியதாகவே உள்ளது.
எமது தாய்நாட்டின் மக்க ளான அந்த மக்களும் மிக விரைவில் விடுவி க்கப்பட்டு அரசியல் யாப்பின் கீழ் அவர்களுக்கு உரித்தான சகல உரிமைகளும் சமத்துவமும் வழங்கப்படும் என நான் இச்சந்தர்ப்பத்தில் உங்களிடம் உறுதியளிக்கின்றேன்.
மேலும் 500 வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டில் இருந்துவந்த காலனித்துவ ஆதிக்கம், சுரண்டல் என்பவற்றிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தியாகங்களைச் செய்து நாட்டுப் பற்றுடன் பல்வேறு போராட் டங்களை முன்னெடுத்துச் சென்ற இலங்கை தேசத்தவர்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் ஏனைய எல்லா சமூகத்தினர்களையும் கெளரவத்துடன் நினைவுகூர்வதற்கு இது மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாகும்.
இன்று பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுபவர்களும் எமது முன்னோர் சுதந்திரத்திற்காக மேற்கொண்ட அதே வகையானதொரு உயர்ந்த போராட்டத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.
எமது நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்தர்ப்பத்தில் எமது தேசத்தின் உன்னத வரலாற்றின் அடிப்படையாக காலா காலம் இருந்துவரும் சகிப்புத்தன்மை, நம்பி க்கை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை வெளி ப்படுத்தி ஒன்றுபட்ட நாட்டில் ஒரே தேசமாக ஐக்கியப்பட முன்வருமாறு எமது எல்லா மக்களிடமும் அழைப்பு விடுக்கிறேன்.
எல்லா இலங்கையர்களுக்கும், சமாதானம், சமத்துவம் முழு அளவில் கிடைக்க வேண்டு மென்ற அவர்களது அபிலாஷைகள் நிறைவேற வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். புதிய தோர் இலங்கைக்குள் அச்சம், பீதிகள் இல்லாத ஜனநாயகம் சுதந்திரம் மிக்க ஒரு சிறந்த யுகத்தை நோக்கி எமது தாய்நாட்டை கொண்டு செல்வதில் நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்.
No comments:
Post a Comment