Monday, February 2, 2009

திலங்க சுமதிபால அரசுடன் இணைந்தார்



ஐ.தே.கட்சி முக்கியஸ்தர் ரொஹான், வேட்பாளர் ஹரிச்சந்திரனும் இணைவு

ஐக்கிய தேசியக் கட்சியின் அனு ராதபுரம் மேற்கு அமைப்பாளரும், ரெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவன முன்னாள் தலைவருமான திலங்க சுமதிபால ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நேற்று இணை ந்தார்.

இதே நேரம், முன்னாள் இரா ஜாங்க அமைச்சர் ரொஹான் அபே குணவர்தனவும், மத்திய மாகாண சபைக்கான ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகர் ஏ. ஹரிச்சந்திரனும் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து கொண்டனர்.

மத்திய மாகாண சபைக்கான ஐ. ம. சு. முன்னணியின் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நுவரெலியா, ஹங்குரான்கெத்த, ரிக்கில்லகஸ்கட, பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்ட த்தின் போதே மேற்படி மூவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பற்றி தங்களது முழு ஆதரவையும் அவருக்குத் தெரிவித்ததுடன், ஐ. ம. சு. முன்னணியிலும் இணைந்து கொண்டனர். இவர்களது இணைவையிட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

No comments:

Post a Comment