போராட்டத்தின் பெயரால் நாம் வழங்கிய அனைத்துப் பணமும் திருப்பித் தரப்பட வேண்டும். பரசுராமன்
எமது பணத்தை பதுக்கி வைத்துள்ள புலம்பெயர் புலிப்பினாமிகள் முற்றுகையிடப்படுவர். சட்டம் ஓர் இருட்டறை.
புலிகள் தமிழ்மக்களை மிரட்டி பணம் வாங்கிய காலம் ஒன்று இருந்தது, பின்னர் வங்கி வைத்திருக்கிறோம் அதில் முதலீடு செய்யுங்கள் என எமாற்றி மக்களது பணம் சுரட்டப்ட்ட காலம் பொற்காலம், தாருங்கள் காசை திருப்பித்தருகிறோம் வட்டியுடன் என்றது வசந்தகாலம், இப்படி காலத்துக்கு காலம் எம்மிடம் காசு வாங்கிய புலிகள் கண்ட மிச்சம் தான் என்ன?
அப்பாவி மக்களை கொலைக் களத்தில் வைத்துக் கொண்டு தப்பியோட்டம் பிடிக்க யோசிக்கிறார்கள் தடியனும் பொட்டனும். மக்களோ தாங்கவொணாத பசித்துயருடன் புலிப்பயத்தினால் வன்னியை விட்டு ஓடமுடியாத ஏக்கதுடன்.வன்னியில் பத்து பரப்பு காணிக்குள் ஒளித்துப் பிடித்து விளையாடும் பயங்கரவாதிகளுக்கு ஊதுகுழல் போடும் லண்டன் ஜபிசி ரேடியோ 1000 இராணுவத்தினரை கொலைப்பசி எடுத்தோம் என்று கணக்கு படிப்பிக்கிறது.
இவை எல்லாம் ஏன் நடக்கிறது என்று பார்த்தால் புலிக்கு காசு சேர்த்து அதில்பழம் திண்டு கொட்டை போட்ட புலிகளின் நிதி சேகரிப்பாளர்களும் அதை அண்டிப் பிழைத்தவர்களுமான பாதுகாப்பு ஏற்பாடு. ஒட்டுமொத்தத்தில் புலியின் வருவாயால் வாழ்கை நாடாத்துபவர்களை மக்கள் முற்றுகையிடும் காலம் நெருங்கிவிட்டதென்பதை புலிகள் உணர்ந்துள்ளதால் இவ்வாறு ஊழையிடுகின்றனர்.
புலி ஒட்டம் எடுக்கும் இன்று யார் புலிப்பாட்டு பாடவருகிறார்கள் என்று யோசனை செய்யுங்கோ?
இவ்வளவு காலமும் புலிகளின் ஆதரவாளர்கள் வெளி நாடுகளில் மிரட்டி கதைத்து பேய்க்காட்டி ஆசை காட்டி, அடைவுகேட்டு, கடைசியாக கடன் கேட்டு காசு சேர்த்தார்களே இவர்கள் சேர்த்த காசு முழு இலங்கையையும் கட்டி எழுப்பியிருக்க முடியும். அந்த அளவு தொகை. இலங்கை அரசின் வரவு செலவுத் தொகைளை விட பல மடங்கு அதிகமான பணம் சேர்க்கப்பட்டது.
சேர்க்கப்பபட்ட பணம் எப்படி எங்கே விரயமானது என்று பணம் கொடுத்தவர்கள் இன்று தான் யோசிக்கின்றோம்.பணம் வாங்க வந்தபோது கூறிய விடங்களில் எதை இன்று இந்த புலிகள் செய்துள்ளார்கள் நாம் கொடுத்த காசில் தலைவர் தனக்கு சொகுசு பங்கர் கட்டுவதில் காட்டிய ஆர்வம் அப்பாவி புலிப் போராளிகளுக்கு சாதாரணமான தங்குமிடங்களைக் கட்டுவதற்குக் கூட கட்டவில்லை அந்த பச்சிளம் பிள்ளைகள் இன்று வரையில் பாட்டா சிலிப்பருடன் தான் வன்னியக் காடுகளுள் ஒடி ஒழிந்து கிடக்குதகள் ஏன்? ஆனால் தலைவரும் மனைவியும் ஜரோப்பிய தயாரிப்பு உடுபுடவைகள் அணிந்து நிற்கினம்.
ஆயுதம் வாங்கிறோம் விமானம் சுடும் ஏவுகணை வாங்குகிறோம் என்றெல்லாம் சேர்த்த காசு எங்கே ? எங்கே விமான எதிர்ப்பு ஆயுதம் எங்கே? எத்தனை விமானத்தை சுட்டு வீழ்த்தினீர்கள்? ஆயுதம் இல்லை என்றால் காசு எங்கே? யார் பதில் சொல்வது?
தலைவருக்கு காசு போய்ச் சேருது என்ற நிதி சேகரிப்பாளர்கள் பதில் சொல்வார்களா?
நிதி சேகரித்த புலிகள் எங்கே பதில் சொல்ல மாட்டீர்களா? உங்களுக்கு தரப்பட்ட வெட்டுத் தொகையுடன் எங்கே போய்விட்டீர்கள்?
சுவீஸ் 20 விகிதம்
ஜேர்மன் 20 விகிதம்
பிரான்ஸ் 15 விகிதம்
லண்டன் 25 விகிதம்
மொத்தமாக 5000 பில்லியன் பவுண்ஸ் காசுகள் சேர்க்கப்பட்டதாக ஒரு புலிகளின் தளபதி கதையளந்துள்ளார். அப்படியாயின் உங்களுக்கு கிடைத்த வெட்டுத் தொகை 1250 மில்லியன் பவுண்ஸ் வெட்டுத் தொகை நாங்கள் படுகுளிரிலும் தும்படித்தும் தந்த காசில் நீங்கள் வீடுவாங்கினீர்கள் கடைகள் தொடங்கினீர்கள் கார் வாங்கி ஓடினீர்கள் நாங்கள் மெட்ரோவில் திரிய நீங்கள் காரில் ஓடீ ஓடீ காசு சேர்த்தீர்களே? எப்படிமறப்போம் உங்களின் இந்த துரோகத்தை?
இது மட்டுமா?
புலிகளுக்கு நீங்கள் கொடுத்த ஜடியாவா? அல்லது பிரபாகரன் தான் வந்து வெளி நாட்டில் சொகுசாக வாழ நினைத்து செய்ய்பட்டதா? இந்த பாரிய முதலீடுகள்?
சுவீஸ் 478 வீடுகள் புலிப் பினாமிகளின் பெயரில் உள்ளது. 180 கடைகள் புலிப் பினாமிகள் பெயரில் இயங்குகிறது. இந்த பினாமிகள் கோயிலுக்கு போய் தினமும் கும்பிட்டு வருகிறார்கள் பிரபா செத்தான் என்றால் தங்கள் பெயரில் உள்ள சொத்தை தாங்களே சுத்திடலாம் என்று.
பிரான்சில் 320 வீடுகளும் 79 கடைகளும் புலிப்பினாமிகளின் பெயரில் புலிகள் சேர்த்த காசு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பினாமிகளின் அயலில் வாழும் எல்லா காசு கொடுத்தவர்களுக்கும் இது தெரியும் சந்தர்ப்பம் வரும் போது எல்லாம் அம்பலத்திற்கு வரும் ஆதாரங்களடன் வெளியிடுவோம்..
அன்று நீங்கள் ஓடுவீர்கள் வன்னிக்கல்ல கடலுக்கு தற்கொலை செய்ய?
லண்டனில் 357 வீடுகள் 423 கடைகள் கோயில்கள் (நகைக்கடைகள் உட்பட) இந்த சொத்தை தமது பெரில் வைத்திருக்கும் புலிப்பினாமிகள் ஒழுங்காக கோயிலில் பூச்சுக்களுடன் தேவாரம் படிக்கிறார்கள். இந்த சொத்தை எப்படி மக்களிடம் கையளிப்பதென்றும் அன்றேல் கர்மம் வந்து சேருமே என்றும் ஏங்குகிறார்கள்?
தங்கள் தங்கள் பிள்ளைகள் தமது மனைவி மக்களுக்கு வரும் துன்பமெல்லாம் இந்த கர்மம் என்றே உணர்ந்துள்ளனர் சிலர் இப்பவே கோயிலில் அழவும் தெடங்கி விட்டனர்.
இவர்கள் புலிக்கு பணம் சேர்த்தது மட்டுமல்ல சேர்த்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தலைவன் தவைவன் என்று தொண்டையறக் தொண்டையற் கத்தியதும் தான் மிச்சம். எவ்வளவு கத்தியும் தலைவனை காப்பாற்ற முடியவில்லை என்பதும் தன்னிடம் உள்ள சொத்தை புலிகளின் ஆதரவாளர்கள் வெளியிடபோகிறார்கள் என்பதும் சிலஆதரவாளர்கள் எற்கனவே அவற்றை சொல்ல தொடங்கிவிட்டார்கள் சிலர் பங்கும் கேட்கின்றார்கள் எனபதுவுமே ஏக்கம்.
இதோ பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டது. இன்னும் சில தினங்களில் வெளி வரும் உங்கள் பெயரில் உள்ள எமது பணத்தின் தொகை அப்போது எமது பணத்திற்காக உங்கள் தொண்டையை பிடிப்போம்.
எப்படியும் மறக்கமாட்டோம் நீங்கள் நிதி சேகரித்த துரோகத்தை.
நிதி சேகரித்த உங்களில் எத்தனைபேர் ஜரோப்பாவில் உடம்மை வருத்தி வேலை செய்து உழைத்துள்ளீர்ள்? வேலைக்கு போகாத உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு காசும் சொத்தும்? எவ்வளவு காசு புலி சம்பளம் தந்தது? நீங்கள் ஓவ்வொருவரும் வைத்திருக்கும் இரண்டுக்கு மேற்பட்ட வீடுகள் புலிகளின் அனுமதியுடன் வாங்கிய வீடுகளா அன்றில் புலிகள் உங்களுக்கு தந்த சம்பளத்தில் அவ்வளவு மிஞ்சம் பிடிக்க முடிந்ததா?
பிரான்ஸிலிருந்து லண்டன் வந்து புலிக்காசை முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர் ? இத்தாலியில் சேர்த்த பணத்தில் லண்டனில் பெற்றோல் ஸ்ரேசன் வாங்கியது எத்தனை பேர்? மக்களுக்கு இது எல்லாம் தெரியாதென்று நினைகின்றீர்களா? எம்மிடம் சேர்த்த பணம் உங்கள் பெயர்களில் முதலிடப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
இப்போது உங்களுக்கு தமிழர் போராட்டம் கசக்கிறது ஏன்? இந்த சொத்துக்களின் ஏகபோக பிரதிநிதித்துவம் உங்களுக்கு மட்டுமே? நீங்களாக இந்த புலிகளின் சொத்தை வெளியிட்டு எமது பணத்தை திருப்பி தர ஏற்பாடு செய்ய வேண்டும் அதை நாம் எமது பெயரில் எடுத்த கடன்களையும் கிரடிற்காட்டுக்கும் கட்ட வேண்டும் இல்லையேல் உங்களின் வாழ்வில் நாம் தலையிடுவோம்.
லண்டனில் கடவுள் கடைகள் கடவுளின் பெயரில் உள்ள காஸ் அன் கரி நகைக் கடைகள் எல்லாம் நாம் அறிவோம்.
முன்னாள் புலிகள் பின்னாளில் புலியை விட்டு ஓடிவந்து புலிகள் வல்வெட்டித்துறையார்கள் புங்குடுதீவார்கள் ,ஏரம்பு மாஸ்டர் குடும்த்தினர் என எத்தனை எத்தனை பேர் எமது பணத்தை கையாண்டுள்ளார்கள் என்பதை வெட்டைக்கு வெளிச்சமாக கூறியுள்ளார்கள். இவ்வாறான உங்களின் துரோகத்தை என்னால் எழுத்தில் வடிக்க மாதங்கள் தேவைப்படுகின்றது. ஆனால் நான் இல்லா விட்டாலும் துரொகங்கள் அனைத்தும் கல்மேல் பொறிக்கப்படும் என்பது எனது நம்பிக்கை.
எமது வீட்டிற்கு வந்து வீட்டில் எத்தனை பேர்? என்றும் எவ்வளவு உழைப்பு? என்றுமெல்லாம் கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருந்தது. உங்களின் புலி மிரட்டல்களுக்கு அங்கே எமது குடும்பங்கள் இருக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக பயந்திருந்தோம். ஆனால் இன்று ஒரு மானம் உள்ள இலங்கையன் புலிப் பயங்கரவாதிகளாகிய உங்களுக்கு பாடம் படிப்பித்துள்ளான் அவன் ஒரவனே வீரன் நீங்கள் கேவலம் கெட்ட கோழைகள்.
இனிமேல் வாய் மூடி இருக்க மாட்டோம் எமது பணம் திரும்ப வரவேண்டும். எங்கள் வாய்களைகளை மூடிய உங்கள் கைகளை களைவோம்..
ஏமது பணத்தை இந்தியா நெடுமாறன் -வை கோ போன்றோருக்கு கொண்டு போய் கொடுத்த நோத் கரோ ஆட்கள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்வோம் இது எங்கள் பணம். சில நாட்கள் பொறுத்திருங்கள் காசைத் தொலைத்த எமது மக்கள் அனைவரையும் திரட்டிக்கொண்டு புலம்பெயர் தேசத்திலே சொகுசாக வாழுகின்ற உங்கள் வாசல்படிகளில் பணம் திருப்பிக் கிடைக்கும் வரைக் கிடப்போம். மீண்டும் சந்திப்போம். VIII
0 comments :
Post a Comment