Thursday, February 12, 2009

இருதரப்பும் மோதலை நிறுத்த வேண்டும். யூ.என்.எச்.சி.ஆர் வலியுறுத்தல்.


விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் இருதரப்பினரதும் மோதல்களில் சிக்கி உயிரிழப்பது குறித்து நேற்று முன்தினம் ஐ.நா. வின் முகவரமைப்பான அகதிகளுக்கான ஐ.நா உயர்தானிகராலயம் கடும் விசனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயம் அழைக்கப்பட்ட பகுதிகளுக்கு சமீபமாக மேற்கொள்ளும் கண்மூடித்தனமான சண்டையை இருதரப்பும் நிறுத்தவேண்டும் எனவும், இருதரப்பினரும் விதிமுறைகளை மீறிச் செயற்படுவதனால் இரண்டரை இலட்சம் அப்பாவிப் பொதுமக்கள் அதில் சிக்கி அவர்கள் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கி வருவதாகவும் யூ.என்.எச்.சி.ஆர் பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் ஜெனிவாவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நூற்றுக்கணக்கான உயிர்கள் தேவையின்றி பலியாகிக்கொண்டிருப்பது தொடர்பாகவும் , பொதுமக்கள் பல்வேறு வகையில் துன்பப்படுவது குறித்தும் தாம் விசனமடைந்திருப்பதாகக் கூறிய அவர் சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளை இருதரப்பும் மதிக்காவிடின் இரத்த ஆறு ஓடவதைத் தடுக்க முடியாதெனவும், இடம் பெயர்ந்து வருகின்ற மக்களை தங்கவைக்கும் இடங்களில் ஆகக் குறைந்தளவாவது சர்வதேச தரத்தைப் பேணுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment