Wednesday, February 11, 2009
சாக்கிரதை,சாக்கிரதை. வசூல் மன்னர்கள் ஜாக்கிரதை.- அ.விஜயகுமார்.
மந்திரத்தில மாங்கன்றை கண்டு ஏமாந்து விடாதீர்கள் குப்பமேனி.குப்பமேனி. தமிழிலும் குப்பமேனி சிங்களத்திலும் குப்பமேனி ,ஆங்கிலத்தலும் குப்பமேனி. சகல வியாதிகளுக்கும் கை கண்ட மருந்து.மலச்சிக்கல்,அஜீரணம்,சகல வாய்வுகள், வாதங்கள்,பசியின்மை, பித்தம்,மயக்கம்,வயிற்றுக்கடுப்பு,வயிற்றுவலி,நெஞ்சுவலி,வயிற்றுப்பொருமல்,திரேக சொறிச்சல்,சூதக வாய்வு, நெஞ்சடைப்பு ,மற்றும் சகல மூல வியாதிகளுக்கும் கை கண்ட மருந்து எனக் கூறிக் கொண்டு ஒருகாலத்தில் மலையாளத்து மாந்திரீகர்கள் நமது தெருக்களில் குப்பைமேனி தைலம் விற்பார்கள்.
மலையாளத்து தமிழில் காலை பத்து மணிக்கு சுபாஸ் கபேக்கு முன்னால் கடைவிரித்தால் :ஒரு மணிக்கெல்லாம் பெட்டியைக் கட்;டிக் கொண்டு வவுனியா பஸ் பிடிக்க புறப்பட்டு விடுவார்கள். ஆனால் சுபாஸ் கபே 'குறையிருந்தால்மாமா எங்களிடம் சொல்லுங்கள்.நிறைவு இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்' என பேனர் வைத்துக் கொண்டு இரவு பத்து மணிவரை ஈ ஓட்டிக்கொண்டிருப்பர். இரண்டு மாத விசிட்டிங் விசாவில தலைமன்னாருக்கு 'இராமானுஜம்' கப்பலில் வந்த கேரளாக்காறன். தலைமன்னாரில் இறங்கி மன்னாருக்கு வந்து மன்னார் பஸ் நிலையத்துக்கு பின்னால் இருந்த கிறவுண்டில் புடுங்கிய 'குப்பைமேனி'யை நம்ம யாழ்ப்பாணத்தான்ர தலையில அரைத்து விட்டுப்போவான்.
கேரளாக்காறனுக்குப் பின் கடந்த 5 , 6 வருடங்களாக வெளிநாடுவாழ் தமிழனின் தலைகளில் மிளகாய் அரைத்து பணம் அறவிட்ட நமது மாந்திரீகர்களின் நிலைதான் இப்போது பரிதாபமாக உள்ளது..
சர்வமும் சக்திமயம் - ஆனால்
தலைவரோ எங்கு ம(மா)யம்.
எப்போதும் எங்கும்
நீக்கமற நிறைந்த அவர்-இப்போது
எந்த பூசை அறையிலும்
பூரணமாக இல்லை.
ஐரோப்பா,அமெரிக்க
தடை வந்த போது
தடதட என கடவுளின் படங்கள்
பரணில் ஏறின
கடவுள.; எங்கள்
வன்னிக்கடவுள்
எல்லை கடந்து விட்டதாக-இங்கு
குட்டிக் கடவுள்கள்
குசுகுசுக்கிறானுகள்.
பட்டி தொட்டியெங்கும்
பணமறவிட்ட
பட்டுத்தாம்பரங்கள் -இன்னும்
பட்டை நாமம் போடுவதை
படுஜோராகத்தான்
நடாத்துகின்றார்கள்.
விசுவமடுவில்
விசுபரூபமெடுத்த
விசமத்தனமான அந்த
விபச்சாரக்குண்டு – அரசு செய்த
வித்தியாசமான அரசியலாம்.
விபரம் புரியாத
விடயமே விளங்காத
விடலைகள் இங்கே
விக்கித்து நிற்கின்றன.சிங்களவன்
இப்படியும் செய்வானோ ?
நாமம்போட
நாமிருந்தால்
நடிகனுக்கென்ன
நட்டுவாங்கம் வேண்டியிருக்கு.
அப்பா
என்ன நடக்குதப்பா !
தலையில் பாதியையும்
காலில் கால்பாதியையும்
தொலைத்து விட்ட
சின்ன சிறுவனவன்
தந்தையிடம் வினவுகின்றான் ?
ஐந்து வயதிருக்கும்
ரத்தக் கசிவுடைய
மற்றதொரு குழந்தையை
தடவிக் கொடுத்துக் கொண்டு
ஒன்றுமில்லையப்பா
ஒன்றுமில்லை என்று
பெரிய குழந்தைக்கு
ஆறுதல் கூறுகின்றார்.
முற்றும் துறந்த முனிவராக !?
ராணுவத்தாதி அங்கே
ரத்தம் துடைக்கின்றாள்.இதை
உலகத்
தொலைக்காட்சியாம் அல்ஜஸீரா
ஊருக்குப் பறை
சாற்றிக்கொண்டிருக்க -இங்கே
துச்சாதனன்கள்
வன்னித் துரௌபதியை
துகிலுரிந்து
கொண்டிருக்கிறார்கள்.
பத்து பல சரக்குக்கடைக்கும்
எட்டு எஸ்.ஓ.கராஜூக்கும்
ஆறு சிக்கன் சொப்புக்கும்
நான்கு திறிறும் ஹவுஸூக்கும்
சொந்தக் காறர் அவர். ஊரில்
சொந்தமாக எதுவுமில்லை
யுரோப்பில்
விசாவுமில்லை.ஆனால்
மிளகாய் அரைக்க தமிழனும்
துதிபாட 'ஆமாம்'; களும்
தங்கவந்த நாட்டில்
தாராளமாக கிடைத்ததால்.
தம்பி ஒரு அவங்கட ஆள்.
குட்டித் தொழிலதிபர்.
கூழைக்குடித்து
குட்டையைக் குழப்பும் இந்த
குட்டித் தொழிலதிபர்களால்
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்டிய முதல்
குடிமகனும்
குக்கிராமங்களில்
குலைநடுங்கி இருப்பதாக
குட்டிக் கதைகளும்
குறைவாக வருகின்றன.
குதிரை கஜேந்திரனை
நெற்றிக் கண் திறந்து
கேள்வி கேட்ட
நோர்வே அண்ணா – ஒருக்கா
ஜேர்மன்.பிரான்ஸ்
அமெரிக்கா,லண்டன் என
ஒரு விசிட்டு
வாங்கோ அண்ணா-இங்கே
நிறைய கழுதைகள்
தோகை விரித்து
கடை விரித்து
கதை விரித்து.....!!
அணை உடைந்ததில்
ஆறாயிரமாம்.
முந்தாநாள் ஊடறுப்பில்
2000 பிளஸ்
வகை தொகையில்லா
ஆயுதமாம்.
கனடா கவன ஈர்ப்பில்
35 ஆயிரமாம்.
லண்டன் ஆர்ப்பரிப்பில்
ஓண்ணரை லட்சமாம்.
நேற்று கடற்சமரில்
டோவர் ஐந்தாம்.
தேசம்,தமிழ் அரங்கம்
ஊடறு ,தேனி
நெருப்பு,எங்கள் தேசம்
சத்தியக்கதாசி,மீன்மகள்
டிபன்ஸ் டொட் எல்கே
சூத்திரம் எல்லாமும்
சாத்தானின் வேதங்களாம்
லங்காசிறியும் .புதினமும்தான்
புதினம் காட்டுவார்களாம்.
தமிழனுக்கு
காதுகுத்தி நாளாச்சு –இதை
வாங்கோடு சொல்ல
வன்னித் தமிழன் எனக்கு
வக்கனை ஏதுமில்லை-இன்னும்
என் உறவு.என் ரத்தம்
வன்னியில் வெதும்புதையா ?
புஷ்ஷூக்கு செருப்பெறிந்த
சங்கதிக்குப் பின்னர்.
குதிரைக்கு லாடம் கட்டிய
நீர்தான் இப்போ
தமிழ் பேசுமிடமெங்கும் வின்னர்.
ஒருவாட்டி
யுரோப்புக்கு வந்து – புதிய
மலையாளத்து மாந்திரிகர்களுக்கு
மந்திரித்து போங்கண்ணா. இப்போ
குஸ்தி போட்ட
குட்டித்தொழிலதிபர்கள்
குடும்பத்தோடு சொத்துக்களை
'பாக்கி'க்கும்
'வங்காளிக்கும்
கொமிஷனுக்கு
கொடுப்பதாக-செய்தியொன்று
குல்லா போட்டு
குலாவுகின்றது.
சாக்கிரதை,சாக்கிரதை.
கணக்கு கேட்க வேண்டும்
சாக்கிரதை.VII
No comments:
Post a Comment