இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை யின் நிலைப்பாடானது, இந்தியாவின் நிலைப் பாட்டை ஒத்ததாகுமென்று ஐ. நா. செயலாளர் நாய கம் பான் கீ மூன் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினை குறித்து இந்திய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் விரி வாகக் கலந்துரையாடியதாகக் கூறியுள்ள ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கையில் சிவிலியன்கள் பாதிக் கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஐ. நா. வும் இந்தியாவும் கூட்டாக செயற்பட்டு வருவதாகவும் “ரைம்ஸ் ஒப் இந் தியா” பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரி வித்துள்ளார்.
“பாரிய மனிதாபிமானப் பிரச்சினை எழுவதைத் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஐ. நா. வும் ஏனைய அமை ப்புகளும் இதனைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொள்கின் றன” என்று தெரிவித்த பான் கீ மூன், இறுதிக் கட்டமாக, அரசியல் தீர்வொன்று எட்டப்படுமென நம்பிக்கை தெரி வித்துள்ளார். இந்தியாவுக்கு ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கை விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
மற்றும் பிராந்தியத்தின் நிலவரம் குறித்தும் கலந்துரையாடிய அவர், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் நிலவரம், கால நிலை மாற்றம் குறித்தும் ஐ. நா. செயலாளர் நாயகம் தமது சந்திப்பின்போது கவனம் செலுத்தியுள்ளார்
No comments:
Post a Comment