Thursday, February 12, 2009

யாழ் குடாநாட்டில் இருவர் சுட்டுக்கொலை .



யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் திருநெல்வேலி சந்தைக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இராணுவத்தினரின் தொடரணிக்காக மூடப்பட்டிருந்த வீதி திறக்கப்பட்டதும் பொதுமக்களுடன் இருந்த ஆயுததாரிகள் அங்கு கடமையிலிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும், அவர்களைத் துரத்திச் சென்று இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிதாரிகள் இருவரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவரின் ஒருவரின் வாயில் சைனட் வில்லை காணப்பட்டதாகவும், மற்றவரின் காற்சட்டைப் பைக்குள் சைனட் வில்லை காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.


சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் ஆர்.வசந்தசேனன் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். காயமடைந்த இராணுவ வீரர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலாலி வைத்தியசாலைக்க மாற்றப்பட்டுள்ளர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com