Saturday, February 14, 2009

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு- அத்வானி


இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அதிகாரப் பகிர்வு அளித்து இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தினார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி புது தில்லியில் மதிமுக சார்பில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதத்தில் அத்வானி பேசியதாவது:

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படும் கஸ்டத்தைப் போக்குவது குறித்து முழு தேசமும் கவனத்தை செலுத்த வேண்டிய தருணமிது. ஆனால், இந்தப் பிரச்சனை தொடர்பாக மரத்துப் போன நிலையில் மத்திய அரசு உள்ளமை உண்மையிலேயே வருத்தம் அளிப்பதாக உள்ளது.

ராணுவபலம் கொண்டு இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதையே பாஜக விரும்புகிறது. மருத்துவமனைகளின் மீதும், நோயாளிகளின் மீதும் குண்டுவீசப்படுகிறது என்பதை எனது வாழ்நாளில் இப்போதுதான் முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன்.

இது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. ஓவ்வொரு இந்தியனுக்கும் தொடர்புடையது. இலங்கைத் தமிழர்களின் இன்னலை நீக்கும் பணியில் ஓவ்வொரு இந்தியனும் ஈடுபட வேண்டும் என்றார் அத்வானி.

No comments:

Post a Comment