Monday, February 9, 2009

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் பராமரிப்புக்கு விசேட செயலணிகள் அமைப்பு.

வன்னியிலிருந்து அரச பாதுகாப்புப் பகுதியான வவுனியாவிற்கு வருகைதந்து ள்ள 20,000 பொதுமக்க ளையும் பராமரிப்பதற்கான விசேட செயற்திட்டங்களை நேற்று அனர்த்த நிவாரண, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்றுக் காலை அமைச்சரின் தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் விசேட மாநாடொன்று இடம்பெற்றதுடன்இ பொதுமக்கள் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட செயலணிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான கல்வி, சுகாதாரம், குடிநீர், சூழல் சுத்திகரிப்பு நடவ டிக்கைகளுக்குப் பொறுப்பாக யுனிசெப் நிறுவனமும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் குடியிருப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயமும் மலசல கூடங்கள் அமைப்பதற்கான பொறுப்பினை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் ஒக்ஸ்பாம் நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளன. உணவு மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பாக உலக உணவுத்திட்ட நிறுவனமும் நியமிக்கப் பட்டுள்ளது.

நேற்றைய மாநாட்டில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இச் செயலணிகளை நியமித்ததுடன்இ ஏனைய அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் இதன் கீழான வழிகாட்ட லிலேயே இயங்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சகல நடவடிக்கைகளிலும் இச்செயலணிகளுடன் இணைந்து அரச அதிகாரிகள் செயற்படவுள் ளனர்.

இதேவேளை, இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களுக்குப் பொறுப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உதவி அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து வவுனியாவிற்கு வரும் பொதுமக்கள் சம்பந்தமாகத் தெரிவித்த வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர், நேற்றுக்காலை வரை சுமார் 20,000 மக்கள் வவுனியாவிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவித்தார். இவர்களில் 13,000 பேர் வவுனியாவிற்குள் வந்துள்ளதாகவும் மேலும் ஏழாயிரத்துக்கும் எண்ணா யிரத்துக்குமிடையிலான பொதுமக்கள் வவுனியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இவர்களின் உணவு, இருப்பிடம் உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செயலணிகள் உடனடியாகவே தம் பணிகளை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் பணிப்புரை விடுத்ததுடன், மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பாது காப்புப்படை அதி காரிகள், முக்கிய திணைக்களங்களின் தலைவர்கள், படை உயரதிகாரிகள் பலரும் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
Thanks.Thinakaran

No comments:

Post a Comment