Friday, February 6, 2009

சுவிசிலுள்ள புலிகளின் காரியாலயங்கள் முற்றுகையிடப்படுகின்றன.



வன்னியில் புலிகள் முழு நிலப்பரப்பையும் இழந்து படுதோல்வி அடைந்துள்ளபோது வெல்லமுடியாத ஓர் யுத்தம் ஒன்றை நோக்கி 250000 மக்களை 150 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினுள் மனிதகேடயங்களாக அடைத்து வைத்துள்ளதை எதிர்த்து சுவிஸ்மக்கள் புலிகளின் காரியாலயங்களுக்கு நேராக சென்றும் தொலைபேசி ஊடாகவும் விவாதத்தில் ஈடுபடுவதாக தெரியவருகின்றது.

அங்கு செல்லும் மக்கள் இத்தனை காலம் தமிழீழம் எனும் பெயரால் புலிகள் எமது மக்களுக்கு கொடுத்த துயரங்கள் போதும் எனவும் புலிகளது பலம் தற்போது நன்கு நிருபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் போராளிகளாக பலிகொடுப்பதற்கு அடைத்து வைத்துள்ள எஞ்சிய 5000 போராளிகளையும் விடுவித்து அங்கு மனிதகேடயங்களாக வைத்துள்ள பொதுமக்களையும் விடுவித்து புலம்பெயர்தேசத்தில் இத்தனை காலமும் போராட்டத்தின் பெயரால் அறவிட்ட பணங்கள் அத்தனைக்கும் கணக்கு காட்ட வேண்டும் எனவும் புலிகளின் பெயரால் புலம் பெயர் தேசத்தில் பணங்களை கையிருப்பில் வைத்திருப்போர் உடனடியாக அப்பணங்களை வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் சுவிசிலுள்ள புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

வெல்ல முடியாத இவ் யுத்தத்திற்காக பாடசாலை மாணவர்களின் கல்வியை குளப்புவதில் என்ன பயன்?

வெல்ல முடியாத இவ் யுத்தத்திற்காக வாழ வேண்டிய இளம் யுவதிகளை தற்கொலை வெடிகுண்டுகளாக்குவதில் என் என்ன பயன்?

இவ்யுத்தத்தில் நடக்கமுடியாத வயோதிபர்களைக் கூட உதவிப்படையணியாக வலுக்கட்டாயமாக ஈடுத்துவதில் என்ன பயன் என்கின்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment