Wednesday, February 4, 2009

கிளிநொச்சி, முல்லை, பூநகரி, பரந்தனில் முதல்தடவையாக சுதந்திர தின நிகழ்வுகள்



இலங்கையின் 61வது சுதந்திர தின வைபவங்கள் வன்னி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்றுக் காலை கோலாகலமாக கொண்டாடப் பட்டது.

புலிகளின் பிடியிலிருந்து அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பூநகரி, மற்றும் ஆனையிறவு பகுதிகளில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடியுள்ளனர். பூநகரி சந்தியில் படையினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘சமாதான பூங்காவையும் ஞாபகச் சின்னமாக அமைக்கப் பட்டுள்ள வெண்புறாவைக் கொண்ட நினைவுத் தூபியையும் சுதந்திர தினத்தை முன்னிட்டு திறந்து வைத்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை அணிவகுப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

No comments:

Post a Comment