Sunday, February 1, 2009

ரெலோ இயக்கத்தினரின் வைரவப்புளியங்குளம் முகாம் மீது குண்டுத்தாக்குதல்.

புலிகளின் துணைப்படையாக இயங்கி வருகின்ற தமிழீழ விடுதலை இயக்கத்தினரின் வைரவப்புளியங்குளம் முகாம் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தாக்குதலால் முகாம் கட்டிடம் சிறிது சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முகாமிலிருந்து இந்திய தொலைக்காட்சியான சண் ரீவி சேவைகள் எவ்வித அனுமதிப்பத்திரமும் இல்லாமல் மறு ஒளிபரப்பப்பட்டதாகவும் அதனை இலக்கு வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. சட்ட விரோதமான மேற்படி மறு ஒலிபரப்பின் ஊடாக அவ்வியக்கத்தினர் தமது பிரச்சார வேலைகளை முன்னெடுத்து வந்ததாக தெரியவருகின்றனது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com