Friday, February 13, 2009

மேலும் 373 பொதுமக்கள் படையினரிடம்.


விடுவிக்கப்பட்ட பகுதியையான விஸ்வமடு,குருவிக்குளம் பகுதியை நோக்கி மேலும் 373 பொதுமக்கள் கடந்த 48மணித்தியாலத்துக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த புதன்கிழமை(பெப்:11)254 பொதுமக்கள் விஸ்வமடு வடக்கிலிருந்து வந்துள்ளனர்.அவர்களை 58வது டிவிசன் படையினர் வரவேற்றனர். 9 ஆண்கள்,9 பெண்கள், 15 சிறுவர்கள் அடங்கலாக 33பேர் குருவிக்குளப்பகுதிக்கு வந்தனர்.அவர்களை 57வது டிவிசன் படையினர் வரவேற்றனர்.மேலும் குப்பியக்குளம் பகுதியை நோக்கி வந்த 33 பேரை இரண்டாவது செயலணி படையினர் வரவேற்றனர்.

சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் அடங்கலாக 53பேர் 58வது டிவிசன் படையினரிடம் நேற்று(பெப்:12) வந்து தஞ்சம் புகுந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment