கடந்த பத்து நாட்களில் 30,000 பொதுமக்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை.
புலிகளின் கட்டுப்பாட்டை மீறி அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று கடந்த பத்து நாட்களில் சுமார் 30,000 பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்துள்ளதாக
இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
இவ் ஆண்டு தை மாதத்தில் 3,848 பொதுமக்களும், கடந்த பத்து நாட்களில் 29,283 பொதுமக்களுமாக மொத்தம் 33,131 பொதுமக்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் அதே வேளை கடந்த ஆண்டு மொத்தமாக 1704 பொதுமக்களே வருகை தந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment