Thursday, February 12, 2009

இலங்கைக்கு 2,500 சவப் பைகள் கேட்டது ஏன்?


இலங்கைக்கு உடனே 2,500 சவப் பைகள் (body bags) வேண்டும் என்று கேட்டது வழக்கமான மாதாந்திர தேவைக்காகத்தானே தவிர இலங்கை அரசுக்குக் கெட்ட பெயரை வாங்கித்தருவதற்காக அல்ல என்று செஞ்சிலுவைச் சங்கம் விளக்கம் அளித்தது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் ராணுவத்துக்கும் இடையிலான சண்டை இப்போது உச்ச கட்டத்தை ஏட்டிக்கொண்டிருக்கிறது. இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முல்லைத்தீவு காட்டில் நிராயுதபாணிகளாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் மாதந்தோறும் தங்களுக்குத் தேவைப்படும் சவப் பைகளை தங்களுடைய தலைமையகத்திலிருந்து கேட்டுப் பெறுகிறது. மாதத்துக்கு 2,500 வீதம் இவை தேவைப்படும்.

இந் நிலையில் இப்போது சண்டை தீவிரமாக நடப்பதால், ''35,000 சவப் பைகளைத் தயாராக வைத்திருங்கள்'' ஏன்று செஞ்சிலுவைச் சங்கம் தகவல் அனுப்பியதாக இலங்கையில் செய்தி வெளியானது.

இதனால் இலங்கை அரசு கடும் கோபமுற்றது. சர்வதேச அரங்கில் எங்கள் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தானே அபரிமிதமாக சவப் பைகளுக்கு ஓர்டர் செய்கிறீர்கள் ஏன்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் இலங்கை அரசின் அதிகாரி ஓருவர் கொழும்பில் புதன்கிழமை ஆத்திரம் பொங்கக் கேட்டார்.

''நாங்கள் மாதந்தோறும் 2,500 சவப் பைகளை கேட்டுப் பெறுவோம். வவுனியாவில் சண்டை கடுமையாக நடப்பதால் அங்கிருந்த ராணுவ அதிகாரி, ராணுவத் தரப்பிலும் ஆள் சேதம் அதிகமாக இருப்பதால் ஆயிரம் சவப் பைகளைத் தாருங்கள் ஏன்று கேட்டார். அப்படிக் கொடுத்ததால் எங்களிடம் இருப்பு குறைந்துவிட்டது. அதற்காக உடனே 500 சவப் பைகளை அனுப்பித்தரும்படி எங்களுடைய தலைமையகத்தைக் கேட்டோம்.

போர்க்களத்திலும் பிற இடங்களிலும் இறந்துகிடக்கும் சடலங்களை அவை யாருடையதாக இருந்தாலும் அகற்றி வருகிறோம். விடுதலைப் புலிகள், சிவிலியன்கள், இலங்கை ராணுவ வீரர்கள் என்று இறப்பது எவராக இருந்தாலும் சடலங்களை அகற்றுவது எங்களுடைய பணியாக இருக்கிறது. யுத்தகளத்தில் சடலங்கள் விழும் வேகத்தைப் பொறுத்தே எங்களுடைய ஓர்டரும் இருக்கிறது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை'' ஏன்று கொழும்பில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அதிகாரி இலங்கை அரச அதிகாரிக்கு விளக்கம் அளித்தார்.

எதிர்ப்பு: இதற்கிடையே, இலங்கை அரசுக்கு ஆதரவான குழுக்கள் கொழும்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. செஞ்சிலுவைச் சங்கமும், ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்களும் தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி அவற்றை இலங்கையிலிருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என்று அக் குழுக்கள் கோரின.
Thanks: Thinamani.

No comments:

Post a Comment