Saturday, February 14, 2009

பொதுமக்கள் பஸ் மீது கைக்குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி, 13 பேர் காயம். புளியங்குளம்-வவுனியா வீதியில் சம்பவம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த மக்களை ஏற்றி வந்த பஸ் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒரு நபர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை (14) 1.30 மணியளவில் இடம் பெற்றதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது.

புளியங்குளம்-வவுனியா வீதியில் இடம்பெற்றுள்ள இக்கைக்குண்டுத் தாக்குதலில் வயதான ஐந்து ஆண்கள், இரு சிறுவர்கள், வயதான ஐந்து பெண்கள், இரு பெண்கள் ஆகியோர் அடங்குவர். காயமடைந்த அனைவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கொல்லப்பட்டவரின் சடலமும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com