Saturday, February 7, 2009
புலிகளின் சலை கடற்படைத்தளம் படையினரிடம் வீழ்கையில் வினாயகம் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலி. 12வயது பெண் தற்கொலையாளி பலி.
சுண்டிக்குளம் ஊடாக முன்னேறிய படையினர் முல்லைத்தீவு கிழக்கு கடற்கரையோரமாக அமைந்திருந்த புலிகளின் பாரிய கடற்புலி முகாமாகிய சலை முகாமை அண்மித்த போது அங்கு பாரிய மோதல் வெடித்துள்ளது. கடற்புலிகளின் பிரதான முகாமாக விளங்கிய அம்முகாமை தக்கவைத்துக்கொள்ளவற்காக புலிகள் பல தற்தொலைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டுள்ளனர். அத்தாக்குதலில் 12 வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருவர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தளத்தில் உள்ள படைச் சிப்பாய்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி தற்கொலை தாக்குதல் சம்பந்தமாக தளத்தில் உள்ள சிப்பாய் ஒருவர் தெரிவிக்கையில், நாம் மிகவும் எதிர்புக்கு மத்தியில் முன்னேறிக்கொண்டிருந்தோம், புலிகளது எதிர்த்தாக்குதல் உக்கிரமாக இருந்தது. ஆனாலும் திருப்பிதாக்கியவாறு முன்னேறினோம் அப்பபோது பங்கர் ஒன்றின் கூரையின் மேலேறிய 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி பங்கரின் கூரைமேலேறி கீழே குதித்து கைகளை உயர்த்தியவாறு "அண்ணா, அண்ணா" எனக் கத்திக்கொண்டு ஓடிவந்தார். எங்களுக்கு பொறுப்பாக நின்ற சார்ஜன்ட் உடனடியா அவரை ஓடாமல் அவ்விடத்திலேயே நிற்குமாறு உத்தரவிட்டார். ஆனால் அவர் அதைபொருட்படுத்தாது தொடர்ந்து எம்மை நோக்கி ஓடியே வந்தார். அதில் இருக்ககூடிய ஆபத்தை உணர்ந்து கொண்ட சார்ஜன்ட் எங்களை நிலத்தில் படுக்க உத்தவிட்டார் நாம் நிலத்தில் படுத்த அதேகணம் பாரிய சத்தத்துடன் அச்சிறுமி வெடித்துச் சிதறினார். எனது உடலருகில் அவரது கால் வந்து வீழ்ந்தது. எங்களில் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் புலிகள் சலை தளத்தை தக்கவைத்து்கொள்வதற்காக அவர்களது முதலாவது பாதுகாப்பு அணைக்கு முன்பாக கரையோரமாக ஓர் கிராமத்தை அமைத்து அங்கு மக்களை குடியமர்த்தி இருந்ததுடன் படையினர் முன்னேறி வரும்போது அவர்ளை மனிதகேடயங்களாக தமது முன்னரங்குகளுக்கு முன்பாக வைத்துக்கொண்டே சண்டைசெய்துள்ளதுடன் அவர்களை தமது பிரதேசங்களுக்குள் உள்ளவாங்க மறுத்துள்ளனர். எது எவ்வாறாயினும் படையினர் அம்மக்களை சாமர்த்தியமாக தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு சலை முகாமின் முன்னரங்குகளை அடைந்த படையினரை புலிகளின் தற்கொலைதாரிகள் சிலர் இலங்கு வைத்துள்ளனர். ஆனால் அவற்றையும் முறியடித்த படையினர் முகாமை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதுடன் தொடந்தும் அங்கு தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர் கடலோர மணல் பிரதேசமாகையால் அங்கு ஒவ்வொரு சாணுக்கும் மீதிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது.
அங்கு இடம்பெற்ற தாக்குதலில் கடற்புலிகளின் துணைத்தளபதி வினாயகம் உட்பட மிக முக்கிய தளபதிளான பகலவன், காதர் ஆகியோரும் மரணமடைந்துள்ளனர். வினாயகம் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் பொட்டுவுக்கும் மிகவும் நம்பிக்கையானவர். சூசையுடன் உள்வீட்டு முறுகல் ஏற்பட்ட போது சூசையை போட்டுத் தள்ளிவிட்டு அவ்விடத்திற்கு விநாயகத்தை நியமிக்கவே ஏற்பாடாகியிருந்தது. ஆனால் புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு பொறிவெடியில் சூசை மகனை அனுப்பிவிட்டு தான் தப்பித்து பதவியை தக்கவைத்துக்கொண்டார். விநாயகம் கடந்த பேச்சுவார்த்தைக் குழுவில் பல நாடுகளுக்கும் சென்றிருந்ததுடன் கடற்புலிகளின் புலினாய்வுப் பொறுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் பகலவன் ஜெர்லைனா கப்பல் தாக்குதல் உட்பட 100 மேற்பட்ட கடற்தாக்குதல்களை வழிநடத்தியவர் ஆகும். காதர் 1995 ஆண்டு காலப்பகுதிகளில் வடமராட்சி கடற்புலிகளின் பொறுப்பாக இருந்தவர் என்பதும் அண்மையில் சின்னப்பரந்தன் பிரதேச்திற்கு பொறுப்பாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
...............................
No comments:
Post a Comment