பிரணாப் முகர்ஜி இன்று இலங்கையில்.
இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை வந்தடையவுள்ளார். இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வரும் அவர் இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கை பிரச்சினைக்கான இறுதி தீர்வு அதிகார பகிர்வாக அமையமுடியுமே அன்றி இராணுவத்தீர்வாகாது என தொடர்சியாக இந்தியா கூறிவந்தது. வடக்கில் போர் முற்றுப் பெறும் நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயமாக முகர்ஜி அரசுடன் பேசுவார் எனவும் இலங்கையில் தமிழ் மக்களும் ஏனைய மக்களைப் போல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழக்கூடியதான ஓர் தீர்வை நடைமுறைப்படுத்த அரசுக்கு அழுத்தம் ஒன்றை பிரயோகிப்பார் எனவும் கூறப்படுகின்றது.
தமிழ் நாட்டு முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் தொடர் அழுத்தம் காரணமாகவே முகர்ஜி இப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக முதல் அமைச்சர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது விஜயம் தொடர்பாக தெரியப்படுத்தியதுடன் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment