Thursday, January 1, 2009

அமைச்சரவையில் மாற்றம்: ஊடக அமைச்சு ஜனாதிபதி கையில் .

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சராகவிருந்த டாக்டர் சரத் அமுனுகம அவர்கள் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் ஊடக அமைச்சரான அனுர பிரியதர்சன யாப்பா முதலீட்டு ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். முதலீட்டு ஊக்குவிப்பு அபிவிருத்தி அமைச்சராகவிருந்த கரு ஜெயசூரியா அவர்கள் மீண்டும் ஐ.தே.க க்கு தாவியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக மேற்கொண்ட இம்மாற்றங்களின் போது அனுர பிரியதர்சன யாப்பா அவர்களிடம் இருந்த ஊடகத் துறை அமைச்சு ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com