Saturday, January 3, 2009

படையினருக்கு தலைவணக்குவதாக தெரிவிக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கரமநாயக்க புலிகளை ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அரசியலினுள் நுழையுமாறு வேண்டுகின்றார்.



கிளிநொச்சியின் வெற்றியானது முழுநாட்டு மக்களுக்குமானதாகும் என தெரிவித்துள்ள பிரதமர் படையினர் இன்று எமது மக்களின் கனவை நனவாக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில், புலிகளுக்கான சந்தர்ப்பங்கள் இன்னும் முற்றாக அழிந்து போகவில்லை. அவர்கள் விரும்பினால் அரசியல் நீரோட்டத்தில் நுழைந்து தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றும் வகையில் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க முடியும். ஏனவே இத்தருணத்திலாவது அவர்கள் மக்களின் நலனைக் கருத்திலெடுத்து ஆயுதங்களை கைவிட்டு நாட்டு மக்களுடன் ஒன்று சேரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com