விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால், அவரை இலங்கை அரசு, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. ஒருவேளை பிரபாகரன் பிடிபட்டால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய அவரை இந்தியாவிடம் ஓப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் எம். வீரப்பமொய்லி வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு பிரபாகரன் பிடிபடும் சமயத்தில் காங்கிரஸ் தனது நிலையை மாற்றிக்கொள்ளும். ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், திமுக மீது குற்றம்சாட்டியது. இனால் அந்த திமுகவோடுதான் தற்போது காங்கிரஸ் ஓட்டு, உறவு வைத்துள்ளது.
No comments:
Post a Comment