வன்னி மக்களுக்கு பாதுகாப்பான வலையம் ஓன்றை பிரகடணப்படுத்தியுள்ள படையினர் மக்களை அதிவேகமாக அப்பிரதேசங்களை நோக்கி நகருமாறு வேண்டுகின்றனர்.
வன்னியின் முழு நிலப்பரப்பும் படையினர் வசம் வீழ்வது நிச்சயமாகியுள்ள நிலையில், முல்லைத்தீவின் ஓர் சிறுபகுதியினுள் புலிகளினால் மனிதகேடயங்களாக அடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அண்மையில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் படையினர் பாதுகாப்பு பிரதேசம் ஒன்றை பிரகடணப்படுத்தியுள்ளதுடன் மக்களை அப்பிரதேசங்களை நோக்கி உடனடியாக நகருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பரந்தன் நெடுஞ்சாலையான ஏ35 பாதையில் அமைந்துள்ள மஞ்சள் பாலத்தில் இருந்து உடையார்கட்டு சந்தி வரையான 4 கிலோமீற்றர் பிரதேசத்தை ஏ35 பாதையின் இரு நுனி எல்லைகளாக கொண்ட தேவிபுரம் பிரதேசத்தையே படையினர் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடணப்படடுத்தியுள்ளனர். இப்பிரதேசம் தெற்கே 8 கிலோமீற்றர் நீளமான இருட்டுமடு பிரதேசத்தை தெற்கெல்லையாக கொண்டுள்ளது:
பாதுகாப்பு தரப்பிலிருந்து நம்மகமாக கிடைக்கும் தகவல்களில் அடிப்படையில் இப்பிரதேசங்களை நோக்கி முன்னேறுகின்ற மக்கள் உடனடியாகவே வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவர் எனவும் அவர்கள் யுத்தபிரதேசத்தில் இடம்பெறுகின்ற ஆபத்தை எதிர்நோக்க இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment