Sunday, January 4, 2009

அரச அலுவலகங்களில் நாளை தேசிய கொடியை பறக்க விடுக அரசாங்கம் வேண்டுகோள்

கிளிநொச்சியின் வெற்றிக்காக போராடிய படையினருக்கு நன்றி தெரிவித்தும் களமுனையில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் நோக்குடனும் நாளை 5 ஆம் திகதி திங்கட்கிழமை சகல அரசாங்க அலுவலகங்கள், கட்டிடங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. காலை 8.30க்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.

காலை 8.35 மணிக்கு நாட்டிற்காகவும் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்தும் இரண்டு நிமிட நேரம் மெளனஞ்சலி செலுத்த வேண்டும். இயலுமானவரை மதத் தலைவர்களின் பங்களிப்புடன் மத அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும். நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றியும், களமுனையில் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் பற்றியும் நிறுவனங்களின், திணைக்களங்களின் தலைவர்கள் உரை நிகழ்த்த வேண்டும்.

இந்த நடைமுறையை தனியார் துறை நிறுவனங்களும் கடைப்பிடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment