வன்னியில் மூன்று பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ளனர்- தேசத்துரோகிகளாம் !!!!!!!!!!!!!!!!!!!
புலிகளின் வன்பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முயன்ற மூன்று பொதுமக்கள் சுட்டுகொல்லப்பட்டு மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ளனர். பொன்னம்பலம் வைத்தியசாலை முன்பாக கட்டப்பட்டிருந்த சடலங்களில் "தேசத்துரோகிகள்" "இவர்களைத் தொடர்வோருக்கும் இதே தண்டனை வழங்கப்படும்" "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்கின்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்த அட்டைகள் அவர்களது கழுத்துப்பகுகளில் தொங்கவிடப்பட்டிருந்ததாக வன்னியிலிந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புலிகளின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கும் மக்களின் எண்ணிகை வன்னியில் அதிகரித்து வருவதாகவும் அவ்வாறு முயற்சித்து பிடிபட்டவர்கள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள போதும் மக்கள் தொடர்ந்தும் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறிவருகின்றனர். அவற்றை கட்டுப்படுத்துமுகமாக புலிகள் மேற்படி நபர்கள் வன்னியை விட்டு வெளியேற முயற்சித்த தருணத்தில் கைது செய்து அவர்களை சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றது மட்டுமல்லாமல் அவர்களது உடலங்களை மக்கள் பார்க்கும் படியாக டிரக்டர் வண்டிகளில் கட்டி இழுத்துச்சென்று மேற்படி இடங்களில் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.
0 comments :
Post a Comment