இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் நாளை இலங்கை வந்தடைகின்றார். அரச தகவல்களின் அடிப்படையில் நாளை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம அவர்களையும் பல அரச அதிகாரிகளையும் சந்தித்து பேச உள்ள அவர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை அரச அதிபர் மகிந்த ராஜபச்ச அவர்களைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கடந்த இந்திய விஜயத்தின் போது மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச அவர்கள் கிளிநொச்சி
கைப்பற்றப்பட்டதையடுத்து நடைமுறைப்படுத்த தாம் தயாராக வைத்துள்ளதாக இந்தியாவிற்கு சமர்பித்த தீர்வு யோசனை அடிப்படையில் அங்கு பேச்சுக்கள் இடம்பெறும் என நம்பகரமாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment