Thursday, January 8, 2009

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சுட்டுக்கொலை.



சண்டே லீடர் பத்திரிகையின் பிரத ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தனது வீட்டிலிருந்து கல்கிசையில் உள்ள காரியாலயம் நோக்கிப்பயணம் செய்து கொண்டிருந்த அவர் மீது அத்தியடிச் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகளால் காலை 10.20 மணியளவில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக களுபோவில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட அவர் மேலதிக சிகிச்கைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்கைப்பிரிவில் 2.00 மணியளவில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார். இலங்கை ஊடகவியலாளர்கட்கு பாதுகாப்பற்ற இடம் என பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில் அங்குள்ள முன்னணிப்பத்திரிகை ஒன்றின் மூத்த ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.


...............................

No comments:

Post a Comment