வன்னியில் சிங்களவர் வாழ்ந்தமைக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளனவாம்!
வன்னியில் அதிகமான சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சுமார் 1,500 பௌத்த விகாரைகள் இருந்துள்ளன.அதேபோல் சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1,500 வாவிகள் அங்கு உள்ளன - என்று நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:-
மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஜனாதிபதி. அவரால்
மாத்திரமே நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை ஒழித்து, பாதுகாப்பைப் பலப்படுத்தவும், நாட்டை அபிவருத்தி செய்யவும் முடியும்.
புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. அவர் இந்த நாட்டில் இன்னும் 20 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கவேண்டும்.
அவ்வாறு அவர் 20 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் - என்றார்.
0 comments :
Post a Comment