புலிகளின் ஒரு உறுப்பினரைக்கூட கடல்மார்க்கமாக தப்பிச்செல்ல விடமாட்டோம். கப்டன் களுபோவில
புலிகளின் தலைவரும் முன்னணித் தளபதிகளும் தப்பி ஓடி விட்டார்கள், ஓடப்போகின்றார்கள் என ஊடகங்கள் சந்தேசங்களையும் ஊகங்களையும் வெளிவிட்டு வருகின்ற நிலையில் முல்லைத்தீவில் இருந்து எவரும் வெளியேறாதவாறு பார்த்துக்கொள்ள அமைக்கப்பட்டுள்ள கடல்படையின் 4வது விசேட அதிவேக தாக்குதல் படையணியின் பொறுப்பாளர் கப்டன் களுபோவில் புலிகளின் ஒரு உறுப்பினரைக் கூட தாம் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ரூபவாகினியின் விசேட நிருபர் ஒருவரை முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு அழைத்துச் சென்ற கப்டன் களுபோவில அங்கு தமது அணி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்டுள்ள விதத்தையும் படைப்பலத்தையும் நேரடியாக காண்பித்துள்ளார். அதிவிசேட பயிற்சி அளிக்கப்பட்ட பலகடல் சமர்களில் சிறந்து விளங்கிய 1000 பேர் தனது படையணியில் அடங்குவதாக தெரிவித்துள்ள அவர் 24 மணிநேரமும் புலிகள் முடக்கப்பட்டுள்ள பிரசேத்தில் இருந்து எவராவது வெளியேறாதவாறு பார்த்துக்கொள்ள அதிவிசேட படகுகளுடன் 25 டோராப்படகுகள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment