Thursday, January 15, 2009

விடுவிக்கப்பட்ட ஓமந்தைப் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டு வருகின்றனர்.



விடுவிக்கப்பட்ட ஓமந்தையிலிருந்து மணலாறு வரையான பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் நான்கு முகாம்களை அமைத்துள்ளனர். தோடர்ந்தும் அங்கு பல முகாம்கள் நிறுவப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

படைநடவடிக்களில் ஈடுபடும் இராணுவத்தினர் தாம் மீட்ட பகுதிகளை விசேட அதிரடிப்படையினரிடம் பாரமளிப்பது செயல்முறையாகும். அங்கு நிலைகொள்ளும் அதி விசேட பயிற்சி பெற்ற விசேட அதிரடிப்படையினர் பிரதேசங்களை முற்றிலும் சோதனையிட்டு அங்கிருக்கக்கூடிய சகல அச்சுறத்தல்களையும் இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்த பின்னர் சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு வரும்.

No comments:

Post a Comment