பாணம ஒக்கந்த பிரதேசத்தில் ஒரு புலியுறுப்பினர் பலி!
இன்று காலை பொத்துவில் பாணம, ஒக்கந்த பிரதேசத்தில் பதுங்கியிருந்த விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளில் ஒருவர் பலியாகியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத விசேட அதிரடிப்படை அதிகாரியொருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். அம்பாறை பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு அடர்ந்த காட்டுப்பகுதியில் எஞ்சியுள்ள ஒரு சிறு தொகைப் புலிகள் தமது அன்றாட தேவைகளுக்கான பொருட்களை பொது மக்களின் உதவி கொண்டு கொள்வனவு செய்து கொள்ளும் நோக்குடன் வெளிவரும் போது இவ்வாறு இலகுவாக இலக்கு வைக்கப்படுவதாக தெரிவித்த அவர் இன்னும் சிறிது காலத்தில் இப்பிரதேசத்தில் உள்ள புலிகளின் செயற்பாடுகள் முற்றுப்பெறும் என்றார்.
0 comments :
Post a Comment