Wednesday, December 31, 2008

இலங்கையின் கிழக்கே போலீஸ் காவலில் ஒருவர் பலியானதாக குற்றச்சாட்டு


இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் போலீஸ் நிலையத்தில், தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒருவர் வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஐயங்கேணி கிராமத்தைச் சேர்ந்த தவராஜா சுரேஷ்குமார் என்ற அந்த நபரின் மரணம் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பிலிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ள அந்த நபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்று பாதுகாப்பு தரப்பில் கூறப்படுவதை, அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இராணுவ நடமாட்டத்தை கவனித்த அவர் சயனைட் உட்கொண்டு மரணமடைந்ததாகவும், அவரது சடலத்துடன் டி 56 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பு கூறுகிறது.

எந்த சந்தர்பத்திலும் தமது சகோதரர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்ததில்லை என்று அவரது சகோதரி தெரிவிக்கிறார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, அந்தப் பகுதியில் மக்களிடையே ஒரு அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளதாக செங்கலடி பிரதேச சபையின் தலைவரான உருத்திரா தமிழோசையிடம் தெரிவித்தார்.
Thanks BBC

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com