தருமபுரம் பிரதேசத்தில் உக்கிர மோதல்: மூன்று புலிகள் சரண்.
ஏ9 பாதைக்கு அப்பால் நிலைகொண்டுள்ள படையினர் தமது நிலைகளை மேலும் கிழக்கு நோக்கி நகர்த்தியுள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் நேற்று தருமபுரம் பிரதேசத்தில் பல இடங்களில் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம் பெற்றதாகவும் அதில் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் மோதல்கள் முடிவில் தருமபுரம் முன்னணி அரண்களில் இருந்த மூன்று புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினரிடம் சரணடைந்துள்ள புலிகள் தாம் வலுக்காட்டாயமாக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தொடர்ந்தும் உயிர்வாழும் ஆசையில் படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் அங்கு எஞ்சியிருக்க கூடிய புலிகளும் விரைவில் சரணடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment