Monday, January 5, 2009
அம்பாறை மாவட்ட ஆலய தர்மகர்த்தாக்களுக்கான ஓன்றியம்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களினதும் தர்மகர்த்தாக்கள் இன்று ஒன்றுகூடினர். அங்கு தர்மகர்த்தாக்கள் எதிர்கொள்கின்ற பலதரப்பட்ட பாதுகாப்பு மற்றும் சமூகப்பிரச்சினைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இவ் ஒன்றுகூடலில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளரும் மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளருமாகிய இனியபாரதி அவர்கள் தர்மதர்த்தாக்கள் எதிர்கொள்கின்ற பாதுகாப்பு நெருக்கடிகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசி உடனடி தீர்வொன்றை காணமுடியுமெனவும் எதிர்காலத்தில் அவர்களுக்கான வீசேட அடையாள அட்டைகளோ அன்றில் அனுமதிப்பத்திரங்களையோ பெற்றுக்கொள்வதன் மூலம் எமது சமூகம் உயர் ஸ்தானத்தில் வைத்துப்பார்கின்ற தர்மகர்த்தாக்கள் எதிர்கொள்கின்ற பாதுகாப்பு கெடுபிடிகளை குறைக்க முடியுமென கூறியதுடன் சமூகப்பிரச்சினைகளை அவர்கள் தமக்கென ஓர் ஒன்றியம் அமைத்து அடிக்கடி கூடி பேசுவதன் மூலம் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டுகொள்ள முடியுமெனத் தெரிவித்தார்.
மேலும் அங்கு பேசிய தர்மகர்த்தாக்களில் ஓருவர் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகட்கு மனமுவந்து உதவி புரிய வந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் குறிப்பாக அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் இனியபாரதி அவர்களை ஓர் ஆயுததாரியாவே தான் கருதியிருந்ததாகவும் இன்று நேரில் அவரது பேச்சையும் செயற்திறனையும் பார்கின்ற போது வியப்படைந்துள்ளதாகவும் தெரிவித்த தர்மகர்த்தா அவர்கள் தாம் எதிர்நோக்குகின்ற பிணக்குகட்கு நிவாரணம் தேடும் பொருட்டு கூட்டப்பட்ட இவ் ஒன்றுகூடலை எந்தத்தரப்பினரும் அரசியலாக கருதி எம்மீது தமது துப்பாக்கிகளை நீட்ட வேண்டாம் என வினயமாகக் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment