ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அங்கு நிவாரணப் பகுதிகளில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்புகளுக்கு மோதல்கள் நடக்கும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள நிலமைகளை தம் கண்களால் பார்த்து வருவதற்கான வழிவகைகளை இலங்கை அரசு செய்துகொடுக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இலங்கை அரசு ஈட்டி வரும் இராணுவ வெற்றிகள், நாட்டின் வடபகுதியில் தமிழ் மக்கள் அதிக அளவில் இருக்கும் வடபகுதியில் அமைதியை ஏற்படுத்த ஒரு அரசியல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே, பொதுமக்களுக்காக வட கிழக்குப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பிரதேசங்களை மதித்து நடக்கவும், பொதுமக்கள் பலியாவதை இயன்ற அளவு குறைத்து, தடுக்க முயற்சிப்பதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையொன்று தெரிவிக்கின்றது
No comments:
Post a Comment