Thursday, January 29, 2009

ரிஎன்ஏ யினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கண்டன ஊர்வலம் தொடர்பாக சிறி-ரெலோ விடுத்துள்ள வேண்டுகோள்



சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
எமது அன்பிற்கினிய தமிழ் மக்களே

எமது மக்களின் நிம்மதியை கெடுத்து, கிடைத்த அரசியல் தீர்வுகளையும் கிழித்தெறிந்து உயிர்களை பலி கொடுத்து சொல்லொன்னா இழப்புக்களை எற்படுத்தி நிர்க்கதியாக்கி விட்டவர்களுக்கு விலை போனவர்கள் இன்று உங்களை மேலும் ஏமாற்ற வந்திருக்கிறார்கள்.
மக்களே

! ஏமாறாதீர்கள் தங்கள் சுயநலம் கருதியே உங்களை ஊர்வலங்களுக்கு அழைக்கிறார்கள். இவ்வளவு நாட்களும் எங்கு சென்றார்கள் இவர்கள்? உங்கள் துயரத்தில் ஒரு வேளை எனும் பங்கு கொண்டார்களா? உங்கள் வாக்குகளை மாத்திரம் பெற்று தலைமறைவாகி விட்டார்கள். இன்று எதற்காக வந்திருக்கிறார்கள்? தமது பொய்ப் பிரச்சாரங்களும், வேடங்களும் கலைந்து போய் தோலுரித்து காட்டப்பட்ட நிலையிலே தம்மை காப்பாற்றி கொள்ளவதற்காகவே உங்களை கூட்டுச்சேர்க்கிறார்கள். யுத்தத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பி வந்து அரச கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை காரணம் காட்டி உங்களை ஏமாற்றுகிறார்கள் மக்களே! தயவு செய்து சிந்தியுங்கள் இவர்களின் போலிவார்த்தைகளுக்கு மயங்கி ஏமாந்து ஊர்வலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இவ்வளவு காலமும் உங்களை எமாற்றியது போதும் இனிமேலும் ஏமாறாதீர்கள். என்றும் இல்லாது இன்று உங்களை இந்த கபட வேடதாரிகள் அழைப்பது தமது சுயலாபத்திற்கே ஒழிய வேறு எதற்கும் இல்லை.

தம்மினத்தை தாமே அழித்து அதை எதிர்த்தவர்களின் மீதும் அரசாங்கத்தின் மீதும் பழியை சுமர்த்தி தமது வளர்ச்சிக்காக தம்மினத்தை அழிக்க நினக்கும் இந்த குருவிச்சைகளுக்கு விலை போகாதீர்கள் இவர்களின் பேச்சை நம்பாதீர்கள்.

நாம் வன்முறைமீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்ல
சிறீரெலோ

No comments:

Post a Comment