Tuesday, January 6, 2009
எம்ரிவி - எம்பிசி மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல்: துரித விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவு.
இன்று அதிகாலை 2 மணியளவில் பிலியந்தலையிலுள்ள எம்ரிவி-எம்பிசி நிறுவனம் இனம்தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 15-20 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களைத் தாங்கிச்சென்ற குழுவினர் அங்கு காவல்கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் நிறுவன ஊழியர்ளை ஆயுதமுனையில் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்து நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையை அதன் உபகரணங்களுடன் சேர்த்து தீமூட்டியுள்ளனர். அதனுடன் அவ்வறையினுள் கிரேனேடுகளை வீசி வெடிக்கவும் வைத்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்த அங்கு விரைந்த தீயணைக்கும் படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். மேற்படி நாசகார நடவடிக்கையால் நிறுவனத்தின் சேவை முற்றாக தடைப்பட்டுள்ளது. ஊடகமொன்றிற்கெதிரான இக்கொடூரச்செயலை அனைத்து ஊடகங்கள் உட்பட சகல அரசியல்வாதிகளும் கண்டித்துள்ளதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உடனடி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டறியுமாறு வேண்டுகொள் விடுத்துள்ளர்.
No comments:
Post a Comment