Friday, January 2, 2009
கிளிநொச்சி நகரம் கைப்பற்றப்பட்ட செய்தியை ஜனாதிபதி மக்களுக்கு அறிவித்தார்.
புலிகளின் ஈழ ராட்சியத்தின் நிர்வாக தலைமை நகரமாக விளங்கிய கிளிநொச்சி நகரம் படையினர் வசம் வீழ்ந்துள்ள செய்தியை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தேசியத் தொலைக்காட்சியில் தோண்றி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இவ்வெற்றி பற்றி மக்களுக்கு அவர் கூறுகையில் எமது படையினர் தளராத உறிதியுடன் போராடி பல தியாகங்களைச் செய்து இவ்வெற்றியை ஈட்டியுள்ளனர். நாட்டு மக்களாகிய நாம் இத்தருணத்தில் படையினருக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.
இவ்வெற்றியானது வடக்கை தெற்கு வென்றாதாகவோ அன்றில் ஒரு சமுகம் அல்லது ஒரு இனம் மற்றயதொரு சமூகத்தையோ அன்றில் இனத்தையோ வென்று விட்டதானதோ அல்ல. இவ்வெற்றி பயங்கரவாதத்தை தோற்கடித்த வெற்றி என அவரது அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வெற்றிக்காக மனந்தளராது உழைத்த முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் பாதுகாப்பமைச்சின் செயலாளருக்கும் முப்படைகளின் தளபதிகளுக்கும் தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment