Sunday, January 11, 2009

தமிழீழம் உங்களை வரவேற்குதாம்!!




ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திலிருந்து சோதனைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டால் 250 மீற்றர் தூரமளவில் நடந்தோ அல்லது வாகனத்திலோ எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுடியும்.

"வன்னி நிலம் வரவேற்கிறது" எனும் பெயர்ப் பலகை வீதியின் இடது பக்கம் காணப்படும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப்பகுதி ஆரம்பிக்கும் இடமாகும். இந்த பெயர்ப்பலகைக்கு பக்கமாகவே உங்களை அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள் காத்து நிற்கின்றன. சோதனை நிலையத்திற்கு செல்லும் வாகனத்தில் கேட்டு ஏறுங்கள்.

நீங்கள் உங்களுடைய வாகனத்தில் வந்தால் நேராக சோதனை நிலையத்திற்கு செல்ல முடியும். இங்கிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் எமது சோதனை நிலையம் அமைந்துள்ளது.

வன்னிப்பகுதிக்குள் செல்வோருக்கான இடத்தில் பொது வாகனத்தில் வந்தவர்களை இறக்கி விடப்படும். தனி வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை வாகனப்பகுதிக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும்.

வெளிநாட்டவர்களை பதிவு செய்யும் இடம் எனப் போடப்பட்டுள்ள பெயர்ப்பலகை உள்ள இடத்திற்கு செல்லுங்கள். அங்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களை பதிவு செய்யும் பதிவாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்பார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் என்பதற்குரிய கடவுச்சீட்டு அல்லது வெளிநாட்டில் வசித்ததற்குரிய ஆவணங்களைக்காட்டி 10 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபா 1000.00) கொடுத்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

நீங்கள் வன்னியில் தங்கும் முகவரியை மிகவும் தெளிவாகக் கொடுக்க வேண்டும்.

உங்கள் விபரங்கள் பதிந்த பின்பு ஷதமிழீழம் உங்களை வரவேற்கின்றது| என்ற பயண அனுமதி அட்டையினையும் பணம் கொடுத்ததிற்கான பற்றுச்சீட்டையும் தருவார்கள் இதனை திரும்ப வெளிநாடு செல்லும் வரை கவனமாக வைத்திருத்தல் வேண்டும்.

அடுத்து, கொண்டு வரும் பொருட்கள் வெளிப்படுத்தல் படிவத்தில் பதியப்படும். எம்மால் 52 வகையான பொருட்களுக்கு தீர்வை விலக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதாவது 15 பொருட்கள் தீர்வை இல்லாமல் கொண்டுவர முடியும். நிதித்துறை ஆயப்பகுதியினரின் பொருட்கள் சோதனை செய்யும் இடத்திற்கு சென்றால் பொருட்கள் சோதனையிடப்படும். சோதனை முடிந்த பின் சோதனை முடிவடைந்ததற்குரிய பற்றுச்சீட்டு தரப்படும். அதனைக் கொண்டு சென்று சோதனை நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் காட்டி விட்டுச் செல்லுங்கள்.

அடுத்து சோதனை நிலையத்தை அடுத்துள்ள தமிழீழ போக்குவரவுக் கழக பேரூந்து தரிப்பிடத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான பேரூந்தில் ஏறிச் செல்லலாம்.

வன்னி கிழக்கு பகுதியில் (விசுவமடு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை) தங்குபவர்கள் திரும்பி செல்வதற்குரிய அனுமதியினை பெறுவதற்கு புதுக்குடியிருப்பில் உள்ள எமது ஷநந்தவனம்| செயலகத்துக்கு சென்று பெறலாம். அத்துடன் உங்களுடைய குறை நிறைகளை கேட்டு அவர்கள் அதற்குரிய ஆலோசனைகளை தந்து உதவுவார்கள். அத்துடன் எம்முடைய வேலைத் திட்டங்களை பார்வையிட விரும்பியவர்களுக்கு (செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை உட்பட ஏனையவை) அதற்குரிய ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படும்.

வன்னி மேற்கு, மத்திய பகுதியில் (வட்டக்கச்சி, கிளிநொச்சி, அக்கராயன், மல்லாவி) தங்குபவர்கள் கிளிநொச்சியில் உள்ள நந்தவனத்தில் தொடர்பு கொண்டு மேற்படி விடயங்களை கதைத்து ஒழுங்கு செய்யலாம்.

மன்னார் பகுதியில் தங்குபவர்கள் மன்னாரில் உள்ள தடைமுகாமில் தொடர்பு கொள்ளவும்.

வன்னி கிழக்குப் பகுதிக்கு வெளி வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வெளிநாட்டிலிருந்து இருந்து கண்டி-யாழ் (ஏ-9) பாதை ஊடாக யாழ் செல்வோர் கவனத்திற்கு

ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திலிருந்து சோதனைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டால் 250 மீற்றர் தூரமளவில் நடந்தோ அல்லது வாகனத்திலோ வன்னிப் பகுதிக்குள் வரமுடியும்.

இங்கு ஷவன்னி நிலம் வரவேற்கிறது| என்னும் பெயர்ப்பலகை வீதியின் இடது பக்கம் காணப்படும் அந்த இடம் எமது கட்டுப்பாட்டுப்பகுதி ஆரம்பிக்கும் இடமாகும். இந்த பெயர்ப்பலகைக்குப் பக்கமாகவே உங்களை அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள் நிற்கின்றன. இங்கு சோதனை நிலையத்திற்கு செல்லும் வாகனத்தில் கேட்டு ஏறுங்கள்.

நீங்கள் உங்களது வாகனத்தில் வந்தால் நேராக சோதனை நிலையத்திற்கு வரமுடியும். இங்கிருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரமளவில் எமது சோதனை நிலையம் அமைந்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் செல்வோருக்கான பதிவுகளை செய்யும் இடத்தில் வாகனம் உங்களை இறக்கிவிடும்.

வெளிநாட்டவர்களைப் பதிவு செய்யும் இடம் எனப் போடப்பட்டுள்ள பெயர்ப்பலகை உள்ள இடத்திற்கு செல்லுங்கள் அங்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களை பதிவு செய்யும் பதிவாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்பார்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் என்பதற்குரிய கடவுச்சீட்டு அல்லது வெளிநாட்டில் வசிப்பதற்குரிய ஆவணங்களை காட்டி 10 அமெரிக்க டொலர் (இலங்கை ரூபா 1000.00) கொடுத்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் விபரங்கள் அனைத்தும் பதிந்த பின் ஷதமிழீழம் உங்களை வரவேற்கிறது| என்ற பயண அனுமதி அட்டையினையும் பணம் கொடுத்ததற்கான பற்றுச்சீட்டையும் தருவார்கள். இதனை திரும்பி வெளிநாடு செல்லும் வரை கவனமாக வைத்திருத்தல் வேண்டும்.

அடுத்து கொண்டு வரும் பொருட்கள் வெளிப்படுத்தல் படிவத்தில் பதியப்படும் எம்மால் 52 வகையான பொருட்களுக்கு தீர்வை விலக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 15 பொருட்கள் தீர்வை இல்லாமல் கொண்டுவர முடியும். நிதித்துறை ஆயப்பகுதியினரின் பொருட்கள் சோதனை செய்யும் இடத்திற்கு சென்றால் பெருட்கள் சோதனையிடப்படும். சோதனை முடிந்த பின் சோதனை முடிவடைந்ததற்குரிய பற்றுச்சீட்டு தரப்படும். அதனைக்கொண்டு சென்று சோதனை நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் காட்டி விட்டுச் செல்லுங்கள்.

அதன் பின் நீங்கள் வந்த வாகனத்தில் வந்தவர்கள் எல்லோரும் நடைமுறைக்கு ஏற்றவாறு (சாரதி உட்பட) எல்லா வேலைகளையும் முடித்தால் பயணத்தை தொடரலாம். அல்லது தமிழீழ போக்குவரத்துக் கழக பேரூந்தில் ஏறி பயணத்தை தொடரலாம்.

யாழ் தடை முகாமிலிருந்து 1500 மீற்றர் தூரத்தில் காவல் துறையினர் பயணிகள் அனைவரும் பயண அனுமதி அட்டை பெற்றுள்ளார்களா என்பதனைப் பரிசோதனை செய்வார்கள். அதிலிருந்து முகமாலைத் தடை முகாம் நோக்கிப் பயணத்தை தொடரலாம். முகமாலை தடை முகாமில் புளியங்குளத்திலிருந்து பயணித்த அனைவரும் யாழ் செல்கினறனரா என்பதனை உறுதிப்படுத்திய பின் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை மேற்கொள்ள முடியும்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஏ-9 சாலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஷநந்தவனம்| செயலகத்திலோ அல்லது யாழ் கொக்குவிலில் அமைந்துள்ள அரசியல் துறை செயலகத்திலுள்ள அனைத்துலகத் தொடர்பகப் போராளியான இளங்கோவிடமோ பொதுவான தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியவாறு இருக்கும்.



கவனிக்க வேண்டியவை


(1) யாழ்ப்பாணம் செல்லும் பயணிகள் திரும்பி வன்னிக்கோ அல்லது வவுனியாவுக்கோ செல்ல விரும்பினால், எமது தடை முகாமில் (பளை, புளியங்குளம்) வெளிநாட்டவர் பதிவு செய்யும் இடத்தில் பதிந்த பின்னரே அவர்களால் தரப்படும் அனுமதிப் பத்திரத்துடன் மட்டும் பயணத்தை தொடர முடியும்.

(2) வவுனியா சென்று வரவிரும்பும் பயணிகள் பயண அனுமதி அட்டை பரிசோதனை செய்யும் இடத்தில் நாம் திரும்பி வரப்போகின்றோம் என்று கூறி முகமாலையில் தரப்பட்ட அனுமதித் துண்டுடன் நீங்கள் பயணத்தை தொடர முடியும்.

(3) குடும்பமாக வருபவர்கள் சில வேளைகளில் தனித்தனியே செல்ல விரும்பினால் பயண அட்டை பெறும் இடத்தில் முன்கூட்டியே தெரியப்படுத்தி ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

(4) வன்னியில் உள்ள வாகனங்களை பயன்படுத்தாது வேறு இடங்களிலிருந்து வரும் வாடகை வாகனங்கள் கண்டி வீதியை பயன்படுத்துவதற்கு வாகனம் ஒன்றிற்கு தலா ரூபா 3000 போக்குவரத்து கழகத்துக்கு கட்டவேண்டும். வாகன உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. (தீர்வை கட்டாத வாகனங்களுக்கு 4000 ரூபா)

(5) வெளிநாட்டிலிருந்து வரும் எமது மக்கள் அரச வாகனங்களிலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் வாகனங்களிலோ வரும் போதும் தவறாது பயண அனுமதி ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும்.

(6) யாழ் செல்லும் வெளிநாட்டுப்பயணிகள் கண்டி வீதியை விட்டு வன்னியின் ஏனைய பகுதிகளுக்குள் பயணம் செய்வதை தவிர்த்தல் வேண்டும். (செல்வதாயின் அனுமதி பெறுதல் வேண்டும்)

(7) யாழ் செல்லும் பயணிகள் வாகனத்தில் வன்னி செல்வோரை ஏற்றிச் செல்ல முடியாது.



பயணம் தாமதமாகும் சந்தர்ப்பங்கள்


(1) வர்த்தகர்களுடன் சேர்ந்து வரும்போது.

(2) நீங்கள் வரும் வாகனத்தில் வந்த வேறு பயணிகள் எமது சோதனைக்கு உட்படுத்தாது மறைத்து பொருட்களை கொண்டு வந்திருந்தால்.

(3) எமது பண்பாட்டுக்கு பொருந்தாத சீரழிக்கக்கூடிய திரைப்படங்கள் (னுஏனுஇ ஏஊனுஇ ஏஐனுநுழு) கொண்டு வரும் போது.

(4) எமது விடுதலைப் போராட்டத்திற்கு பொருந்தாத நபர்கள் தங்களது வாகனத்தில் வந்திருந்தால்;. (தீர்வை கட்டாத வாகனங்களுக்கு 4000 ரூபா)

(5) வெளிப்படுத்தல் படிவத்தில் சரியான முறையில் தகவல்களை கொடுக்காமல் இருக்கும் போது.

(6) வேறு பயணிகள் தமது பொருட்களை வெளிநாட்டவர்களிடம் கொடுத்து வரும் சந்தர்ப்பத்தில் (தீர்வை மோசடி செய்ய முற்படும் போது)


தமிழீழம் உங்களை வரவேற்கிறது

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், கொழும்பிலிருந்து விமானம் ஊடாக யாழ் சென்று கண்டி வீதி ஊடாக வன்னி, வவுனியா செல்வோர் கவனத்திற்கு.

முகமாலை இராணுவ சோதனை நிலையத்திலிருந்து சோதனைகளை முடித்துக் கொண்டு புறப்பட்டால் 500 மீற்றர் தூரம் அளவில் வாகனத்தில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரமுடியும்.

வீதிக்கு இடது பக்கம் வாகனம் உங்களை அழைத்துச் செல்வதற்கு நிற்கும் அதில் ஏறுங்கள். வன்னி செல்பவர்கள் நேராக சோதனை நிலையத்துக்கு செல்ல முடியும். வவுனியா செல்பவர்கள் அவ்விடத்திலேயே பதிவினை மேற்கொண்டு நேராக புளியங்குளத்திற்கு பயணிக்க முடியும்.

வன்னி செல்பவர்கள் 1500 மீற்றர் தூர அளவில் வீதியின் வலது பக்கம் உங்களை இறக்கி விடப்படும் அங்கு வெளிநாட்டவர் பதியும் இடமென போடப்பட்டுள்ள இடத்திற்கு செல்லுங்கள். அங்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களை பதிவு செய்யும் பதிவாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களை வணக்கம் தெரிவித்து வரவேற்பார்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் என்பதற்குரிய கடவுச்சீட்டு அல்லது வெளிநாட்டில் வசிப்பதற்குரிய ஆவணங்களைக் காட்டி 10 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபா 1000.00) கொடுத்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் விபரங்கள் பதிந்த பின்பு ஷதமிழீழம் உங்களை வரவேற்கிறது| என்ற பயண அனுமதி அட்டையினையும் பணம் கொடுத்ததற்கான பற்றச்சீட்டினையும் தருவார்கள்.

அதனை அடுத்து பொதிகள் சோதனை செய்யும் இடத்திற்கு சென்று சோதனைகள் முடித்தபின் அடுத்துள்ள வழியினால் வெளியேறி தமிழீழ போக்குவரத்துக் கழக பேரூந்தில் ஏறி உங்கள் பயணத்தை தொடர முடியும்.

வாடகை வாகனத்திலோ அல்லது சொந்த வாகனத்திலோ வந்திருந்தால் வாகனத்திற்குரிய பதிவுகள் முடிந்த பின் பயணத்தை தொடரலாம்.

யாழ் நிலைய பணிப்பீட இலக்க நடைமுறைகள்

பணிப்பீடம்: 1

ஊர்திகளில் வரும் பயணிகளுக்கு நடைமுறையைப் பற்றி விளக்கமளிப்பவர், மொழிபெயர்ப்பாளர், பயணிகள் படிவம் விற்பனைப் பகுதி (வழிகாட்டுபவர்).

பணிப்பீடம்: 2

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான பதிவிடம் (அனைத்துலகத் தொடர்பகம்).

பணிப்பீடம் 3

ஊர்திகளில் வரும் பயணிகள் அனுமதி பெறும் இடம். வாகனத்திற்கான அனுமதி பெறும் இடம் (போ.க.பிரிவு).

பணிப்பீடம் 4

வாகனங்களில் வரும் பயணிகளையும், வாகனங்களையும் சோதனை செய்யும் பகுதி (ஆயப் பகுதி).

பணிப்பீடம் 5
தீர்வை செலுத்த வேண்டியோர் தீர்வை கணிப்பீடு செய்யும் இடம் (ஆயப்பகுதி).

பணிப்பீடம் 6

ஊர்தி ஆவணங்களை கையேற்கும் இடம் (ஆயப்பகுதி).

பணிப்பீடம் 7
வாடகை ஊர்திகள் நுழைவுக் கட்டணம் செலுத்தும் இடம் (த.போ.க).

பணிப்பீடம் 8

ஒலி ஒளி நாடாக்கள் ஆய்வு செய்யும் இடம்.(திரைப்பட வெளியீட்டுப் பிரிவு).

பணிப்பீடம் 9

முறையீடுகள் செய்யப்படும் இடம் (ஆயப் பகுதி).

பணிப்பீடம் 10

சாதாரண பயணிகள் படிவம் விற்பனை செய்யும் இடமும், இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பதிவிடமும் (போ.க.பிரிவு).

பணிப்பீடம் 11

சாதாரண பயணிகளின் படிவம் பரிசீலனை செய்து இறப்பர் முத்திரை இடப்படும் இடம் (போ.க.பிரிவு).

பணிப்பீடம் 12
சாதாரண பயணிகள் பொதி பரிசோதனை செய்யும் இடம்.

பணிப்பீடம் 13
தீர்வைக் கணிப்பீடுகள், தமிழீழ வைப்பகப் பதிவு (சிலிப்). பணம் அறவீடு என்பன இருக்கும் இடம் (ஆயப் பகுதி).

வன்னி நிலைய பணிப்பீட இலக்க நடைமுறைகள்


பணிப்பீடம் 01

நடைமுறை பற்றி விளக்கமளிப்பவர், மொழிபெயர்ப்பவர் (வழிகாட்டுபவர் ஆயப் பகுதி).

பணிப்பீடம் 02

அரச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான பதிவுகள். பயண அனுமதிகள் என்பன வழங்கப்படும் இடம் (போ.க.பி).

பணிப்பீடம் 03
வாடகை ஊர்திகள் நுழைவுக் கட்டணம் செலுத்தும் இடம்.

பணிப்பீடம் 04
ஊர்திகளில் பயணம் செய்யும் பயணிகளின் பொதிகளையும், வாகனங்களையும் சோதனை செய்யும் இடம். (ஆயப் பகுதி)

பணிப்பீடம் 05
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான பதிவிடம். (அனைத்துலகத் தொடர்பகம்)

பணிப்பீடம் 06
ஊர்திகளில் பயணம் பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும் இடம். (போ.க.பிரிவு)

பணிப்பீடம் 07

தீர்வைக் கணிப்பீடு செய்யப்படும் இடம். (ஆயப்பகுதி)

பணிப்பீடம் 08

ஊர்தி ஆவணங்கள் கேயேற்கும் இடம். (ஆயப்பகுதி)

பணிப்பீடம் 09
நிலையப் பொறுப்பாளர் சந்திப்பிடம். (ஆயப்பகுதி)

பணிப்பீடம் 10
சிறு வியாபாரிகள் கொண்டுவரும் பொதிகள் சோதனை செய்யும் இடம். (ஆயப்பகுதி)

பணிப்பீடம் 11

சாதாரண பயணிகளுக்கான படிவங்கள் விற்கப்படும் இடமும், படிவங்கள் பரிசீலனை செய்யும் இடமும். (போ.க.பிரிவு)

பணிப்பீடம் 12
சாதாரண பயணிகள் அனுமதிபத்திரத்திற்கு (பாஸ்) இறப்பர் முத்திரை இடப்படும் இடம். (போ.க.பிரிவு)

பணிப்பீடம் 13

சாதாரண பயணிகள் கொண்டுவரும் பொதிகள் ஆய்வு செய்யும் இடம்.(ஆயப்பகுதி)

பணிப்பீடம் 14

திரைப்பட வெளியீட்டுப் பிரிவு ஒலி, ஒளி நாடாக்கள் ஆய்வு செய்யும் இடம். (திரைப்பட வெளியீட்டுப் பிரிவு)

பணிப்பீடம் 15

முறையீடுகள் செய்யும் இடம். (ஆயப்பகுதி)

பணிப்பீடம் 16
தீர்வைக் கணிப்பீடு செய்யும் இடமும், தமிழீழ வைப்பகக் கிளையும் இருக்கும் இடம்.

பணிப்பீடம் 17

ஊர்தி ஆவணங்கள் மீளக் கையேற்கும் இடம். (3.4 கி.மீ) (ஆயப்பகுதி)

8 comments :

Anonymous ,  March 16, 2010 at 12:58 AM  

You commit an error. I can prove it.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com