நேற்று புலிகளின் உரக் களஞ்சியம் ஒன்றைக் கைப்ற்றிய படையினர் இன்று புதுக்குடியிருப்பை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் புலிகளின் பாரிய தொழிற்சாலை ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இத்தொழிற்சாலையில் புலிகள் தமது ஆயதங்களை திருத்துதல், வாகனங்களை யுத்த தேவைகளுக்கு ஏற்றவாறு மறுசீரமைத்தல் இராணுவ வாகனங்களை திருத்துதல் மற்றும் கடற்புலிகளின் வள்ளங்களை திருத்துதல் மாற்றியமைத்தல் போன்ற பல்வேறு வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
மிகவும் விசாளமான இவ் தொழிற்சாலையில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அதிநவீன உபகரணங்கள் காணப்படுவதுடன் அத் தொழிற்சாலை வளாகத்தில் எந்த நேரத்திலும் வேலைகளை முன்னெப்பதற்கு தயாரன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மிகவும் நுட்பமாக தேக்கு மரக்குற்றிகளால் பல பங்கர்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் அங்கு யுத்தம் இடம்பெறுகின்ற நேரத்திலும்சரி விமானத்தாக்குதல் இடம்பெறுகின்ற நேரத்திலும் சரி தொழிற்சாலை இயங்கி வந்ததற்கான பல சான்றுகள் தெரிவதாக அங்கு விஜயம் செய்துள்ள ரூபவாகினி நிருபர் தெரிவித்துள்ளார்.
அத்தொழிற்சாலையில் 81 மிமி செல்களும் தாயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கின்ற படையினர் இத்தொழிற்சாலையை புலிகள் தக்கவைத்துக் கொள்வதற்காக படையினருக்கு பலத்த எதிர்பு காட்டிய போதிலும் படையினரில் தொடர் தாக்குதலால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment