புலிகளின் நான்காவது விமான ஓடுபாதை படையினர் வசம்.
பிரிகேடியர் நந்தண உடவத்த தலைமயில் செயற்பட்டு வரும் 59ம் படையணியினர் இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீலுள்ள புலிகளின் ஓடு பாதை ஒன்றை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லெப் கேணல் ஜானக ஆரியரத்தன தலைமையில் செயற்பட்டுவரும் சிங்க ரெஜிமென்ட் படையணியினரும் லெப் கேணல் ஜெயந்த குணரத்ன தலைமையில் செயற்பட்டு வரும் 593ம் படையணியினரும் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் புலிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி மேற்படி ஓடுபாதையின் ஒரு பகுதியை கைப்பற்றியிருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் இடம்பெற்ற கடும் சமரின் பின்னர் அதன் முழுப்பகுதியும் படையினர் வசம் வீழ்ந்துள்ளது.
2.5 கிலோமிற்றர் நீழமான விமானத்தளத்திலே 1.5 கிலோமிற்றர் நீளமான 100 மீற்றர் அகலமான ஓடுபாதை தாரினால் நன்கு செப்பனிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் புலிகளின் அதிபாதுகாப்பு வலயமாக பிரகடணப் படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment