இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ஏன்னைச் சித்திரிக்க முயற்சி: ஜெயலலிதா
இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு எதிராக தாம் செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்க முதல்வர் கருணாநிதி முயற்சிப்பதாக ஆதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளை இலங்கைத் தமிழர்களின் காவலர்கள் என ஆதிமுக ஓருகாலத்தில் கருதியதை மறுக்கவில்லை. தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற மிதவாத தமிழ் அரசியல் அமைப்புகளின் தலைவர்களை ஓழித்துக் கட்டத் தொடங்கியதால் தமிழர் நலனுக்கான அமைப்பு என்ற உரிமையை விடுதலைப் புலிகள் இழந்துவிட்டார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததன் மூலம் அது ஆபத்தான அமைப்பு என்பது உறுதியானது. அதிலிருந்து ஆதிமுகவின் கொள்கை தெளிவாக இருந்து வருகிறது.
இலங்கையில் வாழும் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த இந்நாட்டு அரசு எந்த முயற்சி எடுத்தாலும் அதை ஆதிமுக எதிர்க்கும். சம உரிமைக்கான தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதிமுகவின் ஆதரவு உண்டு. அதற்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதையும், வன்முறையில் ஈடுபடுவதையும் ஆதரிக்க முடியாது.
பேச்சு மூலம் காணப்படும் தீர்வே இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். இப்படிக் காணப்படும் தீர்வு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுடன், தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்கள் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும், தமிழர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கிய கூட்டுப் பேராட்சிக்கு உட்பட்ட சுயாட்சி கோருவதே நியாயமானது எனவும் ஆதிமுக கருதுகிறது. தமிழர்களின் பிரதிநிதியாகச் செயல்படும் தார்மீக உரிமையை ஈழந்துவிட்ட விடுதலைப் புலிகள் இதுபோன்ற அரசியல் தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இவ்வாறு ஜெயலலிதா தமது ஆறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா? இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதங்களைக் கொடுத்தபோது கருணாநிதி ஏன் ஆட்சேபிக்கவில்லை? இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டபோது கருணாநிதி என்ன செய்துகொண்டிருந்தார்? இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கைகள் குறித்த கருணாநிதியின் நிலைப்பாடு என்ன என்பன உள்ளிட்ட சில கேள்விகளையும் அவர் தமது அறிக்கையில் எழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment