Tuesday, January 6, 2009

நினைத்தவுடன் பிரணாபை அனுப்ப முடியாது: டிஆர். பாலு


நினைத்தவுடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நாம் இலங்கைக்கு அனுப்ப முடியாது. அதற்கென்று சில முறைகள் உள்ளன என மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் ஏன தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமரிடம் வற்புறுத்தினர். ஆகவே பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்ப பிரதமர் ஓப்புக்கொண்டார்.

பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப நாங்கள் இப்போதும் தயாராகவே உள்ளோம். இனால் அதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை.

இன்னொருவர் வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்ல நாம் விரும்பினால், நம்மை வரவேற்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். இனால் அவர்களே விரும்பாவிட்டால், நாம் ஏப்படி அவர்கள் வீட்டுக்குச் செல்ல முடியும்?

தற்போது இலங்கை அரசும் அப்படித்தான் உள்ளது. ஏனவே இலங்கை அரசு விரும்பாமல் நமது அமைச்சரை நாம் அங்கு அனுப்ப முடியாது.
Thanks Dinamani

No comments:

Post a Comment