கல்மடுகுளம் உடைக்கப்பட்டதால் பொதுமக்களே பாதிக்கப்பட்டனர் - இராணுவ பேச்சாளர்
கல்மடு குளத்தை உடைப்பெடுக்கச் செய்து இராணு வத்தை பாதிப்படையச் செய்ய நினைத்த புலிகளின் திட்டம் பலிக்கவில்லை. மாறாக பெருமளவிலான பொதுமக்களும் பொதுமக்களின் சொத்துக்களுமே பாதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புலிகள் கல்மடு குளத்தின் அணை மீது நடத்திய தாக்குதலில் படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. தர்மபுரம் பகுதியிலிருந்த பொதுமக்களின் வீடுகளே பெரும் சேதத்துக்குள்ளாகின எனவும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவின் பல பகுதிகளைப் படையினர் கைப் பற்றியுள்ளனர்.
நகரிலுள்ள டெலிகொம் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் புலிகள் பல்வேறு சிதைவுகளை ஏற்ப டுத்தியுள்ளதைக் காண முடிந்தது.மீட்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் மோட்டார் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம் அழிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளிலிருந்து வெடி பொருட்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர் என வும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment