இளந்திரையன் எங்கே?
புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மடுவை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுமானால் நாம் மதவாச்சியில் நிற்போம் எனக் கூறிய இளந்திரையன் புலிகளியக்கத்தை விட்டு வெளிநாடொன்றில் தஞ்சமடைவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் கசிந்ததை தொடர்ந்து பொட்டுவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்செய்தி ஊர்ஜிதப்படுத்தப்படாத போதும் கடந்த பல மாத காலங்களாக களமுனைத் தகவல்கள் தொடர்பாக எந்தவொரு ஊடகத்தையும் அவர் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதும் அத்தகவல்களை அவ்வமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களே வெளியிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment