Tuesday, January 27, 2009

புலிகள் மீது அனுதாபமில்லை - முகர்ஜி

இலங்கை தமிழ் மக்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகையிலேயே தனது இலங்கை விஜயம் அமையும். அதேசமயம் புலிகள் அமைப்பின் பயங் கரவாதச் செயல்களை இந்தியா ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை யென இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இலங்கை புறப்படுவத ற்கு முன்னர் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் மீது இந்தியாவுக்கு அனுதாபம் கிடையாது.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பற்றியே இந்தியா கவலைப்படுகிறது. அவர்களை பாதுகாப்பதே இந் திய அர சின் நோக்கம். தற்போது மூண்டுள்ள போரில் அப்பாவிகள் சிக்கி பலியாவதை தடுக்க முற்படுவோம் என்று கூறியுள் ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com