லண்டனில் புலிகள் அவசர ஒன்று கூடல். பிபிசிக்கு எதிராக ஆர்பாட்டம்.
வன்னியில் ஒரு சிறுநிலப்பரப்பினுள் முடங்கியுள்ள புலிகள் 230000 பொதுமக்களை மனிதகேடயங்களாக வைத்துகொண்டுள்ள நிலையில் இன்று அவரமாக புலிகளின் லண்டன் கிளை கூட்டப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக கூட்டப்பட்ட இவ் ஒன்றுகூடலுக்கு புலிகளின் முன்னணி லண்டன் செயற்பாட்டாளர்களுடன் சில பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னிமக்களின் அவலநிலை தொடர்பாக பேசுவதற்காகவென அழைக்கப்பட்ட மக்கள் உலகில் முன்னணணி ஊடகமான பிபிசி க்கு எதிரான கோசங்களுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுவிடயமாக அவ் ஒன்று கூடலில் பங்கெடுத்த வெம்பிளி பிரதேசத்தை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவிக்கையில், மேற்குறிப்பிட்ட காரணத்திற்காக எங்களை அழைத்த ஏற்பாட்டாளர்கள் நாம் அங்கு சென்றபோது எதிர்பாராத விதமாக பிபிசி நிலையத்தை அண்டி பிரதேசமொன்றிற்கு அழைத்துச் சென்று வன்னியில் இடம்பெறும் விடயங்களை இவர்கள் புலிகளுக்கு சாதகமாக சொல்கின்றார்கள் இல்லை என்றும் அங்குள்ள மக்களை புலிகள் மனிதகேடயங்களாக வைத்திருக்கின்றார்கள் எனவும் விசமப்பிரச்சாரங்களில் ஈடுபட எத்தனிக்கின்றார்கள் என புலிகளுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அதை முளையிலே கிள்ளியெறிய வேண்டுமாயின் இன்று நாம் இவர்களுக்கு எதிரான ஓர் கோசத்தை இங்கு முன்வைக்கவேண்டும் என்றும் கூறினர். அவ்விடத்தில் நேரடியாகவே மறுப்பு தெரிவிக்க முடியாத நாம் அங்கு சென்றிருந்தோம் ஆனால் அங்கு முன்வைக்கப்பட்ட கோசங்கள் என்பது புலிகளின் நலன் சார்ந்ததாக இருந்ததே தவிர மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவில்லை என கூறினார்.
...............................
0 comments :
Post a Comment