புலிகளின் நிலக்கீழ் எரிபொருள் களஞ்சியம் பிடிபட்டுள்ளது.
தர்மபுரம் பிரதேசத்தை கைப்பற்றியுள்ள படையினர் அங்கு மேற்கொண்ட தேடுதல்களில் புலிகளின் நிலக்கீழ் எரிபொருள் களஞ்சியம் ஒன்றை கண்டுபிடிக்துள்ளனர். அங்கிருந்து 300 பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றிலும் 225 லீற்றர் டீசல் நிரப்பப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
10 ஏக்கர் தென்னந்தோட்டமொன்றினுள் துல்லியமான முறையில் மறைக்கப்பட்டிருந்த மேற்படி பரல்களை பொலித்தீன் உதவியுடன் சீல் செய்து அடைத்து வைத்திருந்தனர் என பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment